Ad Code

Responsive Advertisement

ஆசிரியர் 'சஸ்பெண்ட்' பிழைப்பு ஊதியமும் 'கட்

கல்வித் துறையால், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்ட, கலை ஆசிரியர் சங்க தலைவருக்கு, இரு மாதங்களாக, பிழைப்பு ஊதியம் வழங்காததால், போராட்டம் நடத்துவது குறித்து, சங்க நிர்வாகிகள் ஆலோசித்து வருகின்றனர். 

தமிழ்நாடு கலை ஆசிரியர்கள் நலச்சங்க மாநில தலைவர், எஸ்.ஏ.ராஜ்குமார். இவர், கல்வித் துறையின் பல பிரச்னைகள் குறித்து, நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வது, உயரதிகாரிகளிடம் மனு அளிப்பது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டார். அதனால், இரு மாதங்களுக்கு முன், நீலகிரி மாவட்ட முதன்மை கல்வி அதிகாரியால், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார்.

பத்திரிகைகளுக்கு தவறான தகவல் தருவதாகவும், இவர் மீது, கல்வித் துறை அதிகாரிகள் குற்றஞ்சாட்டினர். இந்நிலையில், ஆசிரியர் ராஜ்குமார், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்ட பின், விதிகளின்படி ஊதியத்தில், 50 சதவீதத்தை பிழைப்பு ஊதியமாக வழங்க வேண்டும்; அதுவும், வழங்கப்படாமல் நிறுத்தப்பட்டு உள்ளது. 'பிழைப்பு ஊதியமாவது வழங்க வேண்டும்' எனக்கோரி, ராஜ்குமார் சார்பில், நீலகிரி மாவட்ட கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டு உள்ளது.

அத்துடன், சென்னை வந்த அவர், முதல்வரின் தனிப்பிரிவிலும், பள்ளிக்கல்வி செயலரிடமும் மனு அளித்துள்ளார். இதேநிலை தொடர்ந்தால், சங்க உறுப்பினர்களை திரட்டி போராட்டம் நடத்த, சங்க நிர்வாகிகள் ஆலோசித்து வருகின்றனர். 

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement