அனைத்து உறுப்பினர்களின், 'ஆதார்' விபரமும் வழங்கிய, 80 லட்சம் குடும்பங்களுக்கு, விரைவில், 'ஸ்மார்ட்' ரேஷன் கார்டு வழங்க, உணவு துறை முடிவு செய்துள்ளது.
ஸ்மார்ட் ரேஷன் கார்டு வழங்கப்பட உள்ளது.இப்பணியை, அரியலுார், பெரம்பலுார் மாவட்டங்களில், அக்டோபரில் துவங்கி, டிச., 31க்குள், அனைத்து மாவட்ட மக்களுக்கும், ஸ்மார்ட் ரேஷன் கார்டு வழங்கதிட்டமிடப்பட்டது. பலர், ஆதார் விபரம் தராததால், இப்பணி தாமதமானது.
திட்டமிட்டபடி
இந்நிலையில், அனைத்து உறுப்பினர்களின் ஆதார் விபரத்தை வழங்கிய குடும்பங்களுக்கு மட்டும், விரைவில் ஸ்மார்ட் கார்டு வழங்கப்பட உள்ளது.இதுகுறித்து, உணவு துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் வசிப்போர் தான், ஆதார் விபரம் தராமல் உள்ளனர். இதனால், ஸ்மார்ட் கார்டு வழங்கும் பணி,திட்டமிட்டபடி துவங்கவில்லை. தற்போது, 80 லட்சம் குடும்பங்கள், ரேஷன் கார்டில் உள்ள அனைத்து உறுப்பினர்களின் ஆதார் விபரங்களையும் வழங்கியுள்ளன.
அரசு ஒப்புதல் அளித்தால், முதல் கட்டமாக, அவர்களுக்கு, டிச., துவக்கத்தில் ஸ்மார்ட்
கார்டு வழங்கப்படும். பின், ஆதார் விபரம் வழங்குவதற்கு ஏற்ப, ஸ்மார்ட் கார்டு வழங்கலாம்.இவ்வாறு அவர் கூறினார்.
எத்தனை பேர்?
தமிழகத்தில், 2.06 கோடி ரேஷன் கார்டுகளில், 7.87 கோடி உறுப்பினர்கள் உள்ளனர். நேற்றைய நிலவரப்படி, 4.96 கோடி பேர் மட்டுமே ஆதார் விபரம் வழங்கியுள்ளனர். மீதமுள்ள, 2.91 கோடி பேர், விபரம் தரவில்லை
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை