Ad Code

Responsive Advertisement

மகப்பேறு விடுப்பை 9 மாதமாக உயர்த்தி அறிவித்த தாயுள்ளம் கொண்ட புரட்சித்தலைவி அம்மா அவர்களுக்கு "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" - சார்பில் நன்றி அறிவிப்பு.

தமிழக அரசு ஊழியர்/ஆசிரியர்களுக்கு 6 மாதமாக இருக்கும் மகப்பேறு விடுப்பை 9 மாதமாக உயர்த்தி அறிவித்த மாண்புமிகு முதலமைச்சர் இதயதெய்வம்  தாயுள்ளம் கொண்ட புரட்சித்தலைவி "அம்மா" அவர்களுக்கு "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" - சார்பில் கோடான கோடி நன்றிகளை தெரிவிப்பதாக பேரவை பொதுச் செயலாளர் திரு.கிருஷ்ணமூர்த்தி அவர்கள் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறியதாவது: 
தமிழகத்தில்  அரசு ஊழியர்/ஆசிரியர்களுக்கு எண்ணற்ற சலுகைகளை மாண்புமிகு முதலமைச்சர் "அம்மா" அவர்கள் செயல்படுத்தி உள்ளார். குறிப்பாக தாயுள்ளம் கொண்ட புரட்சித்தலைவி அம்மா அவர்கள்  பெண்களுக்கு பல புரட்சிகர திட்டங்களை செயல் படுத்தி உள்ளார். அதில் குறிப்பிட்டு கூறவேண்டும் என்றால் 

1) வளர் இளம் பெண்களுக்கு சானிடரி நாப்கின்கள்  வழங்கும் திட்டம் 

2) பேருந்து நிலையத்தில்  தாய்மார்கள் பாலூட்டும் அறை

3) தாலிக்கு தங்கம் 

போன்ற புரட்சிகர திட்டங்களாகும். 


இதனை தொடர்ந்து அரசு பெண் ஊழியர்கள் தங்களின் குழந்தை பிரசவத்திற்கு பின் மீண்டும் வேலைக்கு செல்லும் போது தன குழந்தைகளை கண்டு அவர்கள் படும் மன உளளைச்சல் வார்த்தைகளால் சொல்ல இயலாது . மேலும் குழந்தைக்கு தாய்ப்பால் கிடைப்பதில் சிக்கல் இருப்பதால் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படவும் வாய்ப்பு உள்ளது.

இதனை அறிந்த தமிழகத்தின் முதல்வர் புரட்சித்திட்டங்களின் தாய் "அம்மா" அவர்கள் மகப்பேறு விடுப்பை 9 மாதமாக உயர்த்தி செப்.1, 2016 அன்று  அறிவித்தார். இதனை தொடர்ந்து இன்று அரசனையும் வெளியிட்டு உள்ளார். 

இதன்மூலம் தாய் - குழந்தைக்கு உள்ள பிரிவு விளக்கப்பட்டுள்ளது. குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து குறைபாடு நீங்கும். 

இந்த அரசாணை மூலம் எண்ணற்ற  அரசு பெண் ஊழியர்களின் துயர் துடைத்துள்ளார். இதற்காக  தமிழக  அரசு ஊழியர்/ஆசிரியர்கள்  சார்பில் நன்றிகள் "அம்மா" அவர்களுக்கு காணிக்கை ஆக்குகிறோம்.

இவன் 
  1. பாவலர் க.குகானந்தம், நிறுவனத்தலைவர்
  2. பெ. கிருஷ்ணமூர்த்தி, மாநிலப் பொதுச்செயலாளர் 
  3. பெ. பராம்சாமி, மாநிலத்தலைவர் 
  4. சு.சீனிவாசன், மாநிலப் பொருளாளர்
                                             
   "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" 

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement