Ad Code

Responsive Advertisement

சி.பி.எஸ்.இ., வாரியம் :பெற்றோருக்கு எச்சரிக்கை

'பள்ளிகளில், 'சீட்' வாங்கித் தருவதாக கூறி பணம் வசூலிப்பவர்களிடம் ஏமாற வேண்டாம்' என, சி.பி.எஸ்.இ., கல்வி வாரியம் எச்சரித்துள்ளது. மத்திய அரசின் பாடத்திட்டத்தை பின்பற்றும் மத்திய மேல்நிலை கல்வி வாரியம் எனப்படும், சி.பி.எஸ்.இ., பள்ளிகளில் பிள்ளைகளை சேர்க்க, பெற்றோர் ஆர்வம் காட்டி வருகின்றனர். 

இதைப் பயன்படுத்தி, சி.பி.எஸ்.இ., அதிகாரிகள் போல் நடித்து, பெற்றோரிடம் பணத்தை மோசடி செய்வது அதிகரித்துள்ளதாக புகார்கள் எழுந்தன.

இதுதொடர்பாக, சி.பி.எஸ்.இ., கூறியுள்ளதாவது:சி.பி.எஸ்.இ., அதிகாரிகள் என, சிலர் தங்களை போன் மூலம் அறிமுகப்படுத்தி, பள்ளிகளில் சீட் வாங்கித் தருவதாக பெற்றோரிடம் கூறுகின்றனர். இவர்களை நம்பி, வங்கிகளில் பணத்தை டிபாசிட் செய்ய வேண்டாம். இது போன்ற மோசடி தொடர்பாக, அதிகளவில் புகார்கள் வருகின்றன. இவ்வாறு, சி.பி.எஸ்.இ., தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement