தமிழ்நாடு தொழிலாளர் நல வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு தொழிலாளர் நல வாரியத்திற்கு தொழிலாளர் நல நிதி செலுத்தும் தொழிலாளர்களின் கல்வி பயிலும் குழந்தைகளுக்கு கீழ்க்கண்டவாறு கல்வி உதவித் தொகை வழங்குவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
11ம் வகுப்பு முதல் முதுகலை பட்டம் வரை பயிலும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு புத்தகம் வாங்குவதற்கு நிதியுதவி அளித்தல்; பொறியியல், மருத்துவம், சட்டம், விவசாயம் பட்டதாரி ஆசிரியர் மற்றும் உடற்பயிற்சி ஆசிரியர் ஆகிய கல்விகளின் பட்ட மேற்படிப்பு, பட்டப்படிப்பு மற்றும் பட்டய படிப்புகளுக்கான கல்வி உதவித் தொகை; தொழிற்பயிற்சி கல்வி மற்றும் மேல்நிலைக் கல்விக்கான உதவித் தொகை; மேலும் 10 மற்றும் 12ம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் மாவட்ட அளவில் அதிக மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்ற முதல் 10 மாணவர்களுக்கு கல்வி ஊக்கத் தொகை வழங்கப்படுகிறது.
இந்த கல்வி உதவித் தொகை பெறுவதற்கான விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் 31.10.2016. மேலும் விவரங்களுக்கு, ‘‘செயலாளர், தமிழ்நாடு தொழிலாளர் நல வாரியம், தேனாம்பேட்டை, தொலைபேசி: 2432 1542, இணைய தள முகவரி: www. labour.tn.gov.in’’ ஆகியவற்றில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை