Ad Code

Responsive Advertisement

'எங்க ஊருக்கு வாங்க; படிக்கலாம், பழகலாம்' - எஸ்.எஸ்.ஏ., புதிய திட்டம்

'எங்க ஊருக்கு வாங்க; படிக்கலாம், பழகலாம்' என்ற அடிப்படையிலான புதிய திட்டத்தை, தமிழக பள்ளிக்கல்வித் துறை அறிமுகம் செய்துள்ளது. அரசு மற்றும் அரசு உதவிபெறும் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில், அனைவருக்கும் கல்வி இயக்கமான, எஸ்.எஸ்.ஏ., திட்டம் செயல்படுத்தப் படுகிறது. 

இதில், செயல்வழி கற்றல் உள்ளிட்ட, பல பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. இத்திட்டத்தில், புதிதாக நகர்ப்புற மற்றும் கிராமப்புற பள்ளி மாணவர்களை இணைத்து, புதிய கற்றல் திட்டம் கொண்டு வரப்பட்டு உள்ளது. ஒவ்வொரு மாவட்டத்திலும், கிராமப்புறம் மற்றும் நகர்ப்புறத்தில் உள்ள, தலா ஒரு பள்ளி, ஒரு குழுவாக இணைக்கப்படுகிறது.

கிராமப்புற பள்ளியின், எட்டாம் வகுப்பு மாணவர்கள், நகர்ப்புற பள்ளிக்கு சென்று, அங்குள்ள மாணவர்களுடன் சேர்ந்து படிப்பர். பின், பள்ளியை சுற்றியுள்ள பகுதிகளை சுற்றி பார்ப்பர். நகர்ப்புற மாணவர்களும், தங்களுடன் இணைந்த கிராமப்புற பள்ளிக்கு சென்று, கிராமத்தை சுற்றி பார்ப்பர்.

'மாணவர்களுக்குள் நட்புறவு ஏற்படுத்துதல், நகரம் மற்றும் கிராமப் புறங்கள், அங்குள்ள பள்ளிகளின் வசதிகளை மாணவர்கள் தெரிந்து கொள்வதே இத்திட்டத்தின் நோக்கம்' என, ஆசிரியர்கள் கூறினர். இதற்கு, 'எங்க ஊருக்கு வாங்க; படிக்கலாம், பழகலாம்' என, ஆசிரியர்கள் பெயர் வைத்துள்ளனர். 

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement