Ad Code

Responsive Advertisement

SSA : 60 ஆயிரம் மாணவர்களுக்கு அறிவியல் சுற்றுலா

அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், 6, 7, 8ம் வகுப்பு மாணவர்களின் அறிவியல் திறமையை வளர்க்கவும், அறிவியல் கற்கும் ஆர்வத்தை துாண்டவும் அறிவியல் சுற்றுலாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

இதன்படி, மாவட்டத்தில் 2,000 மாணவ, மாணவிகள் தேர்வு செய்யப்பட்டு, மாவட்டத்திற்குள் உள்ள அறிவியல் ஆய்வகங்கள், மீன் ஆராய்ச்சி நிலையங்கள், விவசாய, தோட்டக்கலை பண்ணைகளுக்கு அழைத்துச் செல்லப்படுவர். அருகில் உள்ள மாவட்டங்களுக்கும் செல்லலாம்.

சுற்றுலா செல்ல வாகன வசதி, உணவு இலவசமாக வழங்கப்படும். இதற்காக ஒவ்வொரு மாவட்டத்திற்கும் தலா 7.42 லட்சம் ரூபாய் வீதம் அனைவருக்கும் கல்வி திட்டம் செயல்படும் 30 மாவட்டங்களுக்கு 2 கோடியே 22 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. டிசம்பர் மாதத்திற்குள் சுற்றுலாவிற்கு ஏற்பாடு செய்ய வேண்டும், என உத்தரவிடப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement