Ad Code

Responsive Advertisement

80 கல்வி அதிகாரிகள் பணியிடங்கள் காலி:அமைச்சர் கவனிப்பாரா

கல்வித்துறையில் 80 அதிகாரிகள் பணியிடங்கள் காலியாக உள்ளதால், பணிகள் ஸ்தம்பிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.கற்றல், கற்பித்தல் பணிகள் கண்காணிப்பு, நலத் திட்டம் வழங்கல் உள்ளிட்டவற்றில் முதன்மை கல்வி அலுவலர் (சி.இ.ஓ.,), மாவட்ட கல்வி அலுவலர்களின் (டி.இ.ஓ.,) பங்கு முக்கியம். அனைவருக்கும் கல்வித் திட்டத்தில் 30 கூடுதல் சி.இ.ஓ., பணியிடங்கள், பல மாதங்களாக காலியாக உள்ளன; அப்பணிகளையும் சி.இ.ஓ.,க்களே கவனிக்க வேண்டியுள்ளது.


தற்போது திருச்சி, திருவண்ணாமலை சி.இ.ஓ., 30 கூடுதல் சி.இ.ஓ., 45க்கும் மேற்பட்ட டி.இ.ஓ., பணியிடங்கள் காலியாக உள்ளன; மேலும், 400க்கும் மேற்பட்ட உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடங்களும் காலியாக உள்ளன.

தற்போது பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பொது தேர்வுக்கான மாணவர் பட்டியல் தயாரிக்கும் பணி துவங்கியுள்ளது. டி.இ.ஓ.,க்கள் இல்லாத கல்வி மாவட்டங்களில், இப்பணிகளை முடிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

ஆசிரியர் சங்க நிர்வாகி ஒருவர் கூறுகையில், 'நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளதால் 400 உயர்நிலை பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படவில்லை. ஆனால், சி.இ.ஓ.,- டி.இ.ஓ., பணியிடங்களை நிரப்பலாம். இதில், அமைச்சர் பாண்டியராஜன் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றார்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement