Ad Code

Responsive Advertisement

விபத்து இல்லாத தீபாவளிக்காக விழிப்புணர்வு

தீபாவளியை பாதுகாப்பாகக் கொண்டாடுவது குறித்து, இன்று முதல் மூன்று நாட்களுக்கு, பள்ளிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. நாடு முழுவதும், வரும், 29ல், தீபாவளி கொண்டாடப்படுகிறது. 

அன்றைய தினம், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை, பட்டாசுகள் வெடித்து மகிழ்வர். அதனால், பல இடங்களில் தீ விபத்துகள் ஏற்பட்டு, பலர் உடல் அளவில் பாதிக்கப்படுகின்றனர்; சில இடங்களில், உயிரிழப்பும் ஏற்படுகிறது.

தீ விபத்து இல்லாமல் பண்டிகையை பாதுகாப்பாகக் கொண்டாட, மாணவர்களுக்கு அறிவுறுத்தும்படி, ஆசிரியர்களுக்கு, பள்ளிக்கல்வி இயக்குனர் கண்ணப்பன் உத்தரவிட்டுள்ளார். பள்ளிகளில், இன்று முதல் மூன்று நாட்களுக்கு, தீயணைப்பு துறையினர் மூலம், இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட உள்ளது.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement