Ad Code

Responsive Advertisement

அரசுப் பள்ளிகளுக்கு ரூ. 6 கோடியில் புதிய கட்டடங்கள்: அமைச்சர் அடிக்கல்

மொளச்சூர், மதுரமங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளிகளுக்கு ரூ.6 கோடியில் புதிய கட்டடங்கள் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.


ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியம், மொளச்சூர், மதுரமங்கலம் ஆகிய பகுதிகளில் இயங்கி வரும் அரசு மேல்நிலைப் பள்ளிகளுக்கு நபார்டு திட்டத்தின் கீழ், தலா 22 வகுப்பறைகள், அறிவியல் ஆய்வுக் கூடம், கழிப்பறை கட்டடங்கள் கட்ட, தலா ரூ.3 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. புதிய கட்டடங்கள் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா அந்தந்த பள்ளி வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

ஸ்ரீபெரும்புதூர் சட்டப்பேரவை உறுப்பினர் கே.பழனி தலைமை வகித்தார், முன்னாள் எம்எல்ஏக்கள் வாலாஜாபாத் பா.கணேசன், மொளச்சூர் ரா.பெருமாள், ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியக்குழுத் தலைவர் சிவகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி கல்வித்துறை அமைச்சர் பா.பெஞ்சமின் கலந்துகொண்டு புதிய கட்டடங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.

இதில், ஒன்றியச் செயலாளர் எறையூர் முனுசாமி, ஒன்றியக்குழு உறுப்பினர்கள் ஜோசப், பாலமுருகன், சிங்கிலிப்பாடி ஊராட்சிமன்றத் தலைவர் ராமசந்திரன், பள்ளி தலைமையாசிரியர்கள் கலந்துகொண்டனர்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement