Ad Code

Responsive Advertisement

பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற மாணவ, மாணவிகளுக்கு பயிற்சிப் பட்டறை

வாலாஜாபேட்டையை அடுத்த சுமைதாங்கியில் உள்ள நாக் கல்விக் குழுமத்தில் பயிலும் 10-ஆம் வகுப்பு, பிளஸ் 2 மாணவ, மாணவிகளுக்கு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெறுவதற்கான பயிற்சி பட்டறை முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.


முகாமுக்கு, பள்ளித் தாளாளர் எஸ்.சி.பிள்ளை தலைமை வகித்தார். முதன்மைச் செயலாளர் பார்வதிநாதன் முன்னிலை வகித்தார். இதில், தேசிய பயிற்சியாளர் சிவசுப்பிரமணியன் கலந்துகொண்டு, அரசுப் பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெறுவது எப்படி என்பது குறித்து மாணவ, மாணவிகளுக்கு ஆலோசனைகளை வழங்கினார்.

காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற்ற இந்த பயிற்சி பட்டறையில், 350-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் கலந்துகொண்டு பயன்பெற்றனர்.

இதில், முதன்மை நிர்வாக அலுவலர் சி.நாகராஜன், சிபிஎஸ்இ பள்ளி முதல்வர் சந்திரா கைலாசம், மெட்ரிக். பள்ளி முதல்வர் பாவைகார்த்திகேயன், மேல்நிலைப்பள்ளி ஒருங்கிணைப்பாளர் சுந்தரபாண்டியன், பயிற்சியாளர்கள் ரகுநாதன், என்.டி.சீனிவாசன், மக்கள் தொடர்பு அலுவலர் சுந்தர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement