Ad Code

Responsive Advertisement

கல்விக்கடன் ரத்து : முதல்வர் பிரிவில் மனு

'கல்விக் கடன் ரத்து அறிவிப்பை, சட்டசபையில் வெளியிட வேண்டும்' என, அரசுக்கு, தமிழ்நாடு மாணவர் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் பாரிமைந்தன், முதல்வர் அலுவலகத்தில் கொடுத்துள்ள மனு: 


ஆதிதிராவிடர், பழங்குடியினர், மதம் மாறிய கிறிஸ்தவ ஆதிதிராவிட மாணவ, மாணவியரின் கல்விக் கட்டணத்தை, அரசே ஏற்கிறது. இந்த திட்டத்தின்படி, தமிழக மாணவர்களுக்கு வழங்க வேண்டிய, 1,402 கோடி ரூபாயை, மத்திய அரசு நிலுவை வைத்துள்ளது. இத்தொகையை விடுவிக்கும்படி, மத்திய அரசை வலியுறுத்த வேண்டும். கல்விக் கடனை ரத்து செய்து, வரும் சட்டசபை கூட்டத்தொடரில் அறிவிக்க வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டு உள்ளது.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement