Ad Code

Responsive Advertisement

பள்ளிக் கல்வி : ஆசிரியர் பணியிட கலந்தாய்வு அட்டவணை வெளியீடு

அரசு பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கான இடமாறுதல் கவுன்சிலிங் ஆக.6ம் தேதி முதல் தொடங்குகிறது. வரும் 19ம் தேதி முதல்(நாளை மறுநாள்) இணையதளத்தில் ஆசிரியர்களிடம் விண்ணப்பம் பெறப்படுகிறது. தமிழக பள்ளி கல்வி இயக்குனர் கண்ணப்பன், அனைத்து முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பி உள்ள சுற்றிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: 

* நடப்பாண்டில் அரசு பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு பொதுமாறுதல் கவுன்சிலிங் இணையதளம் மூலம் மேற்கொள்ளப்பட உள்ளது.

* ஒரு ஆசிரியர் ஒரு விண்ணப்பம் மட்டுமே பதிவு செய்ய வேண்டும். ஒரே விண்ணப்பத்தில் மாவட்டத்துக்குள்ளேயும், வேறு மாவட்டத்துக்கும் சேர்த்து விண்ணப்பிக்கலாம். ஒன்றுக்கு மேற்பட்ட விண்ணப்பம் பதிவு செய்யப்பட்டால் அவரது பெயர் கணினியில் தானாகவே நீக்கப்பட்டு விடும்.  

* பொதுமாறுதல் விண்ணப்பத்தில் உள்ள அனைத்து விவரங்களையும் முழுமையாக கூர்ந்தாய்வு செய்து கணினியில் பதிவு செய்தல் வேண்டும். அதன்பிறகு திருத்தம் செய்ய முடியாது.

* விண்ணப்பம் மற்றும் காலிப்பணியிட விவரங்களை முழுமையாக சரிபார்த்து குறிப்பிட்ட தேதிக்குள் தவறாமல் இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

* 19.07.2016 முதல் 28.07.2016 வரை விண்ணப்பம் பெறப்பட வேண்டும். இணையதள முகவரி பின்னர் அறிவிக்கப்படும். இவ்வாறு அந்த சுற்றிக்கையில் கூறப்பட்டுள்ளது.

கவுன்சிலிங் மற்றும் பதவி உயர்வு நடைபெறும் தேதி விவரம்:

அரசு நகராட்சி மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்கள் மாறுதல் (மாவட்டத்துக்குள் மற்றும் மாவட்டம் விட்டு பிற மாவட்டம்) - 06.08.2016

அரசு நகராட்சி மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் பதவி உயர்வு - 07.08.2016

அரசு நகராட்சி உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மாறுதல்(மாவட்டத்துக்குள், மாவட்டம் விட்டு மாவட்டம்) - 13.08.2016

அரசு நகராட்சி மேல்நிலைப்பள்ளி முதுகலை ஆசிரியர்கள் மாறுதல்(மாவட்டத்துக்குள்) - 20.08.2016

அரசு நகராட்சி மேல்நிலைப்பள்ளி முதுகலை ஆசிரியர்கள் மாறுதல்(மாவட்டம் விட்டு மாவட்டம்) - 21.08.2016

அரசு நகராட்சி மேல்நிலைப்பள்ளி முதுகலை ஆசிரியர்கள் பதவி உயர்வு - 22.08.2016

உடற்கல்வி ஆசிரியர்கள், தையல், இசை, கலை ஆசிரியர்கள்-இடைநிலை ஆசிரியர்கள்(மாவட்டத்துக்குள்) - 23.08.2016

உடற்கல்வி ஆசிரியர்கள், தையல், இளங்கலை, ஆசிரியர்கள்-இடைநிலை ஆசிரியர்கள்(மாவட்டம் விட்டு மாவட்டம்) - 24.08.2016

பட்டதாரி ஆசிரியர்கள் பணி நிரவல் - 27.08.2016 முதல் 29.08.2016 வரை

பட்டதாரி ஆசிரியர்கள் மாறுதல்(மாவட்டத்துக்குள்) - 3.09.2016

பட்டதாரி ஆசிரியர்கள் மாறுதல்(மாவட்டம் விட்டு பிற மாவட்டம்) - 4.09.2016

இடைநிலை ஆசிரியர்கள், உடற்கல்வி சிறப்பு ஆசிரியர்கள் பட்டதாரி ஆசிரியராக பதவி உயர்வு - 6.09.26.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement