தமிழகத்தில் உள்ள எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., படிப்புகளுக்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வு ஆகஸ்ட் மாத இறுதியில் நடக்க வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
முதல் கட்ட கலந்தாய்வின் முடிவில் தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில் அனைத்துப் பிரிவினருக்கும் உள்ள அனைத்து இடங்களும் பூர்த்தி செய்யப்பட்டன.
அரசு பல் மருத்துவக் கல்லூரியில் உள்ள 85 இடங்களில் 78 இடங்கள் நிரம்பி மீதம் 7 இடங்கள் காலியாக உள்ளன. சுயநிதிக் கல்லூரிகளின் அரசு ஒதுக்கீட்டு இடங்களைப் பொருத்தவரை, 72 எம்.பி.பி.எஸ். இடங்களும், 970 பல் மருத்துவ இடங்களும் மீதம் உள்ளன.
என்இஇடி("நீட்') தேர்வு: எம்.பி.பி.எஸ்.-பி.டி.எஸ். 2-ஆம் கட்ட கலந்தாய்வை ஜூலை 18-ஆம் தேதி நடத்த தீர்மானிக்கப்பட்டது. இந்த நிலையில் தமிழக சுகாதாரத் துறை இணையதளத்தில் சனிக்கிழமை அறிவிóப்பு வெளியாகி உள்ளது.
அதில் தேசிய தகுதிகாண் தேர்வு (என்இஇடி) ஜூலை 24-ஆம் தேதி நடைபெறவுள்ளது. அதன் முடிவுகள் ஆகஸ்ட் 12-ஆம் தேதி வெளியாகும். அதைத் தொடர்ந்து அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு மாணவர் சேர்க்கை நடைபெறும்.
அகில இந்திய ஒதுக்கீட்டில் மீதம் உள்ள இடங்கள், முதல் கட்ட கலந்தாய்வில் காலியாக உள்ள இடங்கள், முதல் கட்ட கலந்தாய்வில் பங்கேற்று மாணவர்கள் சேராததால் ஏற்பட்டுள்ள காலியிடங்கள் ஆகியவை இரண்டாம் கட்ட கலந்தாய்வில் நிரப்பப்படும்.
கலந்தாய்வு குறித்த அறிவிப்பு சுகாதாரத் துறையின் ஜ்ஜ்ஜ்.ற்ய்ட்ங்ஹப்ற்ட்.ர்ழ்ஞ் என்ற இணையதளத்தில் வெளியிடப்படும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே எம்.பி.பி.எஸ். 2-ஆம் கட்ட கலந்தாய்வு ஆகஸ்ட் இறுதியில் நடைபெற வாய்ப்புள்ளது என்று மருத்துவக் கல்வி தேர்வுக்குழு அதிகாரிகள் தெரிவித்தனர்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை