Ad Code

Responsive Advertisement

தொடக்க கல்வி ஆசிரியர்களுக்கு ஆக., 3 முதல் 21 வரை கவுன்சிலிங்

ஒன்றாம் வகுப்பு முதல், 8ம் வகுப்பு வரையிலான தொடக்க, நடுநிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கு, ஆகஸ்ட், 3 முதல், 21ம் தேதி வரை, விருப்ப இடமாறுதல் கவுன்சிலிங் நடத்தப்படுகிறது. இதுகுறித்து, தொடக்க கல்வி இயக்குனர் இளங்கோவன் வெளியிட்டுள்ள அறிவிப்பு:


வரும், 19ம் தேதி முதல், 28 வரை, ஆசிரியர் மாறுதல் விண்ணப்பங்களை, உதவி தொடக்க கல்வி அலுவலகத்தில் அளிக்க வேண்டும்


உதவி தொடக்க கல்வி அலுவலர்களுக்கு, 'ஆன்லைன்' கவுன்சிலிங், ஆக., 3ல் நடக்கும். நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு, உதவி தொடக்க கல்வி அலுவலராக, ஆக., 4ல் பணி மாறுதல் வழங்கப்படும்


நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பொது மாறுதல், பதவி உயர்வு; பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணிநிரவல், ஒன்றியத்திற்குள் பொது மாறுதல், பதவி உயர்வு; மாவட்டத்திற்குள் ஒன்றியம் விட்டு ஒன்றியத்திற்கு பொது மாறுதல் ஆகியவற்றுக்கான கவுன்சிலிங், ஆக., 6ல் நடக்கும்


தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பொது மாறுதல் மற்றும் பதவி உயர்வு கவுன்சிலிங், ஆக., 7ம் தேதியும், இடைநிலை ஆசிரியர்களுக்கு பணிநிரவல் கவுன்சிலிங், ஆக., 13ம் தேதியும் நடக்கும்


இடைநிலை ஆசிரியர்களுக்கு ஒன்றியத்திற்குள் இடமாறுதல், மாவட்டத்திற்குள் ஒன்றியம் விட்டு ஒன்றியம் மாறுதல், ஆக., 14ல் நடக்கும்


பட்டதாரி ஆசிரியர்களுக்கு மாவட்டம் விட்டு மாவட்டத்திற்கு, ஆன்லைன் கவுன்சிலிங், ஆக., 20ம் தேதியும், இடைநிலை ஆசிரியர்களுக்கு மாவட்டம் விட்டு மாவட்டத்திற்கு, ஆன்லைன் கவுன்சிலிங், ஆக., 21ம் தேதியும் நடக்கும். இவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement