புதுக்கோட்டையில் 150 எம்.பி.பி.எஸ். இடங்களுடன் வரும் கல்வியாண்டில் புதிய அரசு மருத்துவக் கல்லூரி செயல்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.ஆண்டுதோறும் ஒரு புதிய அரசு மருத்துவக் கல்லூரியை தமிழக அரசு ஏற்படுத்தி வருகிறது. இதன்படி,
புதுக்கோட்டையில் கல்லூரி:
இந்த நிலையில், புதுக்கோட்டையில் 150 எம்.பி.பி.எஸ். இடங்களுடன் வரும் கல்வியாண்டு (2017-18) முதல் அரசு மருத்துவக் கல்லூரியை தொடங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இதற்கான கட்டுமானப் பணி நடைபெறுகிறது. முதல் கட்டமாக பேராசிரியர்கள், இணைப் பேராசிரியர்கள் என 161 புதிய பணியிடங்கள் ஏற்படுத்தவும் முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இதனால், அரசுக்கு தொடர் செலவினமாக ஆண்டுக்கு சுமார் ரூ.8.87 கோடி செலவாகும்.
கரூரிலும்...:
இதேபோல், கரூரிலும் 150 எம்.பி.பி.எஸ். இடங்களுடன் புதிய அரசு மருத்துவக் கல்லூரியைத் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இதன்படி, இரு இடங்களிலும் கல்லூரிக்குத் தேவையான கட்டடங்கள் உள்ளிட்ட கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த ரூ.229.46 கோடிக்கு நிர்வாக ஒப்புதலும் நிதி ஒப்பளிப்பும் வழங்கப்பட்டுள்ளது.
808 புதிய பணியிடங்கள்:
கோயம்புத்தூரில் செயல்பட்டு வரும் மருத்துவக் கல்லூரிக்குத் தேவையான 808 புதிய பணியிடங்களை ஏற்படுத்த முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இதனால், அரசுக்கு தொடர் செலவினமாகஆண்டுக்கு ரூ.39.68 கோடி செலவாகும்.புதுக்கோட்டையில் தொடங்கப்பட உள்ள கல்லூரி, கோவையில் செயல்பட்டு வரும் மருத்துவக் கல்லூரி ஆகியவற்றுக்கான969 புதிய பணியிடங்கள் காரணமாக அரசுக்கு ஆண்டுக்கு மொத்தம் ரூ.48.55 கோடி கூடுதல் செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.மேற்கண்ட தகவல்கள் தமிழக அரசு வெளிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை