இந்தியா முழுவதும் சுகாதாரமான 500 அரசு பள்ளிகளுக்குதலா ரூ.50 ஆயிரம் பரிசு வழங்கும் பிரதமர் மோடியின் தேசிய இயக்கத்திற்கு 'ஆன்லைனில்' பதிவு நடைபெறுகிறது.துாய்மை பாரதம் திட்டத்தில் அரசு மற்றும் உதவி பெறும்பள்ளி கழிப்பறைகள் தினமும் இருவேளை பராமரிக்க பணியாளர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதற்காக அனைவருக்கும் கல்வி இயக்கம் மூலம் துவக்க மற்றும் உயர்நிலை பள்ளிகளை தேர்வு செய்யும் பணி நடக்கிறது.சுய மதிப்பீடுஇத்தேர்வு 'ஆன்லைன்' மூலம் நடத்தப்படுகிறது. பள்ளிகளுக்கு 39 கேள்விகளுடன் நான்கு விடைகள் அடங்கிய சுயமதிப்பீட்டு படிவம் அளிக்கப்பட்டுள்ளன. அதில் பள்ளிகளில் உள்ள அடிப்படை வசதிகள், பயன்பாடு ஆகியவற்றை மையப்படுத்தி கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன.பள்ளியில் குடிநீருக்கு என்ன செய்கிறீர்கள் என கேள்விக்கு, 4 விடைகள் அளிக்கப்பட்டிருக்கும். வசதியினை 'டிக்' செய்து பதிவேற்றம் செய்ய வேண்டும். பதில்களுக்கு ஏற்ப மொத்தம் 100 மதிப்பெண் வழங்கப்படும்.
தேர்வு குழுக்கள்
மதிப்பெண் அடிப்படையில் மாவட்ட, மாநில, தேசிய அளவிலான குழுவினர் பள்ளிகளை ஆய்வு செய்வர். மாவட்ட குழுவில் கலெக்டர், மாவட்ட கல்வி அலுவலர், சிறந்த மூன்று தலைமை ஆசிரியர்கள், இன்ஜினியர், உடல்நல அலுவலர், இரு தன்னார்வலர்கள் இடம்பெறுவர். மாநில குழுவில் பள்ளி கல்வி செயலர், இயக்குனர், உடல்நல இயக்குனர், இரு தலைமை ஆசிரியர்கள், தலைமை இன்ஜினியர் , பஞ்சாயத்து ராஜ் இயக்குனர் இடம் பெறுவர். தேசிய குழுவில் தலைமை கல்வி செயலர், துணை செயலர் இடம் பெறுவர்.
மாநிலத்தில் 40 பள்ளிகள் தேர்வு செய்து, அதில் 20 பள்ளிகள் தேசிய போட்டிக்கு பரிந்துரை செய்யப்படும். 20 பள்ளிகளுக்கு விருது, அங்கீகார சான்று வழங்கப்படும். சிறந்த பள்ளிகளாக தேர்வு செய்யும் 500பள்ளிகளுக்கு தலா ரூ.50ஆயிரம் நிதி, உள்கட்டமைப்பு வசதி மேம்படுத்துவதற்கு வழங்கப்படும். தேர்வு செய்யப்படும் பள்ளிகள் விபரம் நவ., 25ல் அறிவிக்கப்படும்.போட்டிகளில் பங்கேற்க பள்ளிகள் சுயமதிப்பீடு கேள்விகளுக்கு பதில் அளித்து வருகின்றன.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை