அரசு பொதுத்தேர்வில் இரண்டாம் முறையாக மறு மதிப்பீடு கோர முடியாது எனக்கூறி மனுவை ஐகோர்ட் கிளை தள்ளுபடி செய்தது. திண்டுக்கல் மாவட்டம் பழநியைச் சேர்ந்த பொன்ராஜ், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், என் மகன் செல்வேந்திரன் நாமக்கல் தனியார் பள்ளியில் படித்தான். 2015-16 பிளஸ் 2 தேர்வில் 1140 மதிப்பெண் பெற்றான். உயிரியல் பாடத்தில் 195 மதிப்பெண் பெற்றான்.
மனுவை நீதிபதி எம்.வேணுகோபால் விசாரித்தார். கூடுதல் அட்வகேட் ஜெனரல் செல்லப்பாண்டியன், அரசு வக்கீல் சண்முகநாதன் ஆகியோர் ஆஜராகி, ‘மாணவன் துல்லியமாக விடையளிக்கவில்லை. கூடுதல் விளக்கம் தேவைப்படுகிறது. ஏற்கனவே மறுமதிப்பீடு செய்து ஒரு மதிப்பெண் கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது. இரண்டாவது முறையாக மறு மதிப்பீடு கோர முடியாது’ என்றார். இதையடுத்து நீதிபதி, பள்ளி கல்வி விதிப்படி மறுமதிப்பீடு செய்த பின் ஏற்படும் முடிவு இறுதியானது. இரண்டாம் முறையாக மறுமதிப்பீடு கோர முடியாது. கூடுதல் மதிப்பெண் கிடைக்கும் என்பதற்கான காரணமும் போதுமானதாக இல்லை. எனவே, இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது, என உத்தரவிட்டார்.
 
 
 
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை