Ad Code

Responsive Advertisement

வேலை வாய்ப்புக்காக காத்திருப்போர் எண்ணிக்கை தமிழக அரசு வெளியீடு

தமிழகத்தில் வேலை வாய்ப்புக்காக காத்திருப்போரின் விபரப்பட்டியலை வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி இயக்ககம் வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-

தமிழகத்தில் மொத்தம் 83 லட்சத்து 33 ஆயிரத்து 864 பேர், மார்ச் 31-ந் தேதி நிலவரப்படி வேலை வாய்ப்புக்காக காத்திருப்போர் பட்டியலில் உள்ளனர். இவர்களில் 42 லட்சத்து 72 ஆயிரத்து 41 பேர் பெண்களாகும். 


காத்திருப்போர் பட்டியலில் உள்ளவர்களில் 18 லட்சத்து 24 ஆயிரத்து 342 பேர் எஸ்.சி. இனத்தவர். அவர்களில் 9 லட்சத்து 7 ஆயிரத்து 107 பேர் பெண்கள். மொத்த காத்திருப்போரில் ஒரு லட்சத்து 98 ஆயிரத்து 784 அருந்ததியர் உள்ளனர். அவர்களில் 98 ஆயிரத்து 4 பெண்கள். அதுபோல், மொத்த பட்டியலில் 63 ஆயிரத்து 898 பேர் எஸ்.டி. இனத்தவர் உள்ளனர், (பெண்கள் 29 ஆயிரத்து 282). காத்திருப்போர் பட்டியலில் உள்ளவர்களில் 22 லட்சத்து 498 பேர் எம்.பி.சி. பிரிவினர் (பெண்கள் பத்து லட்சத்து 89 ஆயிரத்து 748).


அதுபோல் மொத்த பட்டியலில் உள்ளவர்களில் 3 லட்சத்து 24 ஆயிரத்து 653 இஸ்லாமியர்கள். அதில் ஒரு லட்சத்து 61 ஆயிரத்து 825 பேர் பெண்கள். பிற்படுத்தப்பட்டோர் 34 லட்சத்து 53 ஆயிரத்து 868 பேர் உள்ளனர். அவர்களில் 18 லட்சத்து 42 ஆயிரத்து 160 பேர் பெண்கள். வேறு பிரிவினர் 2 லட்சத்து 67 ஆயிரத்து 81 பேர் உள்ளனர். (பெண்கள் ஒரு லட்சத்து 43 ஆயிரத்து 915).
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement