தமிழக அரசுத் துறைகள், உள்ளாட்சி அமைப்பு, பொதுத்துறை நிறுவனங்கள், பல்கலை ஊழியர்களுக்கு மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ் 2007ல் ரூ.2 லட்சம் வழங்கப்பட்டது.
ஊழியர்களின் சம்பளத்தில் குறிப்பிட்ட தொகையை பிடித்தம் செய்து, தனியார் நிறுவனத்திற்கு டெண்டர் விட்டு, நான்கு ஆண்டுகளாக இத்திட்டம் செயல்படுகிறது. இத்தொகையை ரூ.4 லட்சமாக உயர்த்தி 2012 ஏப்.,27ல் அரசு உத்தரவிட்டது. இந்நிலையில், இத்திட்டத்தை மேலும் நான்கு ஆண்டுகளுக்கு தொடரவும், மருத்துவ காப்பீடு தொகையை ரூ.7.50 லட்சமாக உயர்த்தவும் அரசு உத்தரவிட்டுள்ளது.
மருத்துவ காப்பீடு தொகையை உயர்த்தியது வரவேற்கத்தக்கது. இருப்பினும் 'காசில்லாமல் சிகிச்சை' என்ற நோக்கத்துடன் அரசு மருத்துவ காப்பீடு திட்டத்தை ஊழியர்களுக்கு செயல்படுத்துகிறது. சில மருத்துவமனைகளில், 'முன்பணம் செலுத்தினால் மட்டுமே சிகிச்சை அளிக்க முடியும்' என அரசு ஊழியர்களை நிர்பந்திக்கின்றனர். இதுபோன்ற குறைகளையும் நிவர்த்தி செய்ய வேண்டும்
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை