கணினி வழி கல்வியில் சிறப்பாக செயல்படும் பள்ளி ஆசிரியர்களுக்கு தேசிய விருதுக்கு விண்ணப்பிக்க தமிழகத்தில் பள்ளிகள் ஆர்வம் காட்டாத நிலை உள்ளது. கணினி வழி கல்வியில் ஆர்வமுடன் செயல்படும் ஆசிரியர்களுக்கான தேசிய விருது ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது. இதற்கான விண்ணப்ப படிவங்கள் பள்ளி கல்வி இயக்குநரகத்தில் இருந்து கடந்த ஆண்டே அனுப்பி வைக்கப்பட்டது.
சிறந்த ஆசிரியர்களை தேர்வு செய்து அனுப்புமாறு அனைத்து முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டிருந்தது. மாவட்ட அளவில் முதன்மை கல்வி அலுவலர் தலைமையில் ஒரு குழு அமைத்து அந்த குழு மூலம் மாவட்டத்திற்கு மூன்று ஆசிரியரை தேர்வு செய்து அந்த ஆசிரியர் பற்றிய விபரத்தை மே 31ம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
மேலும் இது தொடர்பான முழு விபரங்களை பற்றி ஆசிரியர்கள் அறிந்துகொள்ள www.ciet.nic.in, www.ncert.nic.in என்ற இணையதளத்தில் சென்று பார்த்து அறிந்து கொள்ள வேண்டும் என்று பள்ளி கல்வி இயக்குநர் உத்தரவிட்டிருந்தார். ஆனால் தமிழகத்தில் நீலகிரி மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் இருந்து மட்டுமே விண்ணப்பங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
பிற மாவட்டங்களில் இருந்து இதுவரை விண்ணப்பிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில் சிறப்பாக பணியாற்றும் கணினி வழி கல்வியில் ஆர்வமுடன் செயல்படும் தகுதியுடைய ஆசிரியர்களை தேர்வு செய்து வரும் 17ம் தேதிக்குள் உடனடியாக அரசுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று பள்ளி கல்வி இயக்குநர் மீண்டும் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் உத்தரவிட்டுள்ளார்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை