தமிழ்நாடு கால்நடை மருத்துவ பல்கலை இளநிலை படிப்புகளில் சேர, நாளை முதல், ஆன்லைனில் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். இதுகுறித்து, பல்கலை துணைவேந்தர் எஸ்.திலகர் கூறியதாவது:
கால்நடை பல்கலையில், பி.வி.எஸ்.சி., 320 இடங்கள்; பி.டெக் - உணவு தொழில்நுட்பம்; கோழியின தொழில்நுட்பம்; பால்வளத் தொழில்நுட்ப படிப்புகளுக்கு, தலா, 20 என, 380 இளநிலை பட்டப்படிப்பு இடங்களுக்கு, மாணவர் சேர்க்கை துவங்குகிறது. நாளை முதல், www.tanuvas.ac.in என்ற, பல்கலை இணையதளத்தில், ஆன்லைனில் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.
மாணவர்கள், பூர்த்தி செய்த விண்ணப்பத்தினை, தகுந்த சான்றிதழ் நகல்களுடன், 'தலைவர், சேர்க்கைக் குழு, இளநிலை பட்டப்படிப்பு, தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலை, மாதவரம் பால் பண்ணை, சென்னை - 51' என்ற முகவரிக்கு, ஜூன் 16ம் தேதி, மாலை 5:45 மணிக்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை