Ad Code

Responsive Advertisement

மாணவர்களுக்கு விஷால் உதவிக்கரம்

கல்லுாரியில் சேர ஆர்வமுள்ள நலிந்த குடும்பத்தை சேர்ந்த மாணவ, மாணவியருக்கு, நடிகர் விஷால் உதவிக்கரம் நீட்டியுள்ளார்.இதுகுறித்து, விஷால், தன் முகநுால் பக்கத்தில் கூறியுள்ளதாவது:



பிளஸ் 2 முடித்த, படிக்க ஆர்வமுள்ள மாணவ, மாணவியர், கல்லுாரி படிப்பை தொடர நினைத்து, குடும்ப சூழல் காரணமாக முடியாமல் போனால், அவர்களுக்கு உதவி செய்ய காத்திருக்கிறோம்.இதுபோன்ற மாணவர்களுக்கு, திருச்சியில், தனியார் கல்லுாரி ஒன்று உதவ முன்வந்துள்ளது. இதே போல், பலர் உதவி செய்ய தயாராக உள்ளனர். இதற்காக, தேவி அறக்கட்டளையை, 87540 09846 என்ற எண்ணில் தொடர்பு கொண்டால், தேவையான தகவல்கள் மற்றும் உதவிகள் கிடைக்கும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement