Ad Code

Responsive Advertisement

தேர்தல் முடிவுகளை நிறுத்த பார்வையாளருக்கு அதிகாரம்

விதிமீறல் இருந்தால் தேர்தல் முடிவை நிறுத்த பார்வையாளர்களுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. ஓட்டு எண்ணும் மையங்களில் ஓட்டுப்பதிவு இயந்திர ஓட்டுக்களை எண்ண 14 மேஜைகள் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு மேஜைக்கும் எண்ணுகை மேற்பார்வையாளர், உதவியாளர் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் பார்வையாளர்களின் பிரதிநிதிகளாக 'மைக்ரோ அப்சர்வர்கள்' நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் தேர்தல் பார்வையாளர் கட்டுப்பாட்டில் செயல்படுவர்.


அவர்கள் சுற்று வாரியாக ஓட்டு எண்ணிக்கை விபரங்களை தேர்தல் பார்வையாளரிடம் ஒப்படைப்பர். மேலும் ஓட்டு எண்ணிக்கை பணியை கண்காணித்து பார்வையாளரிடம் தெரிவிப்பர். விதிமீறல் இருப்பதாக கருதினால் தேர்தல் முடிவு அறிவிப்பதற்கு முன், அவற்றை நிறுத்தி வைக்க பார்வையாளருக்கு அதிகாரம் வழங்கப்படுள்ளது. அதற்கான காரணத்தை உடனடியாக தேர்தல் ஆணையத்திற்கு தெரிவிக்க வேண்டும் என, அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement