Ad Code

Responsive Advertisement

மாணவர்கள் ஊக்கத்தொகை உயர்வு, முதல்வர் ஜெ., பட்டியல்

சட்டசபையில், ஐந்து ஆண்டுகளில், 110வது விதியின் கீழ் அறிவித்து நிறைவேற்றப்பட்ட திட்டங்களை, முதல்வர் ஜெயலலிதா பட்டியலிட்டு உள்ளார். அவரது அறிக்கை: கைத்தறி, கைத்திறன், துணிநுால் மற்றும் கதர்துறை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மற்றும் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை ஆகிய மூன்று துறைகளிலும், கடந்த ஐந்தாண்டுகளில், 110வது விதியின் கீழ் அறிவிக்கப்பட்டு, நிறைவேற்றப்பட்ட திட்டங்கள் வருமாறு:



கைத்தறி, கைத்திறன், துணிநுால் மற்றும் கதர்துறை:
கூட்டுறவு கைத்தறி நெசவாளர் சேமிப்பு மற்றும் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் செலுத்தப்படும், மாநில அரசின் பங்கான, நான்கு சதவீதம், எட்டு சதவீதமாக உயர்த்தி வழங்கப்பட்டு உள்ளது


மல்பரி நடவு மானியம் உயர்த்தி வழங்கப்பட்டு உள்ளது


பட்டு ரக துணிகளின் விற்பனைக்கு உச்சவரம்பின்றி, 10 சதவீதம் சிறப்பு தள்ளுபடி வழங்கப்பட்டு உள்ளது


ஆதிதிராவிடர் மற்றும்பழங்குடியினர் நலத்துறை
முழு நேர முனைவர் பட்டப்படிப்பை மேற்கொள்ளும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவ, மாணவியருக்கு, ஊக்கத்தொகை, 50 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டு, நான்கு ஆண்டுகளுக்கு வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது



தமிழகத்தில் உள்ள, 76 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவியருக்கான, கல்வி ஊக்குவிப்பு சிறப்பு திட்டம், ஏழாம் வகுப்பு மற்றும் எட்டாம் வகுப்பு படிக்கும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவியருக்கும் விரிவுபடுத்தப்பட்டு உள்ளது



ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்காக, எட்டு மாவட்டங்களில், தலா ஒரு கல்லுாரி விடுதி, பெரம்பலுார் மாவட்டத்தில் இரண்டு விடுதிகள் துவக்கப்பட்டு உள்ளன



சுற்றுச்சூழல் மற்றும்வனத்துறை
தமிழ்நாடு வனத்தோட்டக் கழகத்தின் பணிகள், மேலும் சிறக்கும் வகையில், 4,500 எக்டேர் பரப்பளவில், மரக்கூழ் தோட்டங்களும், 800 எக்டேர் பரப்பில், உயர் விளைச்சல் ஒட்டு முந்திரி கன்றுகளும், நடவு செய்யப்பட்டு உள்ளன



திருநெல்வேலி மாவட்டத்தில், உயிர் பன்மை செரிந்துள்ள பகுதிகளை உள்ளடக்கி, 'நெல்லை வன உயிரின வன சரணாலயம்' ஏற்படுத்தப்பட்டு உள்ளது



இவ்வாறு முதல்வர் ஜெ., தெரிவித்துஉள்ளார்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement