Ad Code

Responsive Advertisement

அரசு ஊழியர் வீடு ஒதுக்கீடு கண்காணிக்க புது திட்டம்

அரசு ஊழியர் வாடகை குடியிருப்புகளை ஒதுக்கீடு செய்வதில், மோசடிகளை தடுக்க, புதிய நடைமுறையை, வீட்டுவசதி வாரியம் உருவாக்கி உள்ளது.

சென்னையில், பட்டினப்பாக்கம், லாயிட்ஸ் காலனி, பீட்டர்ஸ் சாலை, சைதாப்பேட்டை, நந்தனம், அண்ணா நகர், முகப்பேர் என பல்வேறு பகுதிகளில், அரசு ஊழியர் வாடகை குடியிருப்புகள் உள்ளன. இதே போல், பிற மாவட்டங்களிலும், அரசு ஊழியர் வாடகை குடியிருப்புகள் உள்ளன.



இந்த குடியிருப்புகளை பெற விரும்பும் அரசு ஊழியர்கள், முறையாக விண்ணப்பிக்க வேண்டும். காலியாக இருக்கும் வீடுகள் எண்ணிக்கை, விண்ணப்பங்கள் வந்த நாள் ஆகியவற்றின் அடிப்படையில், இந்த வீடுகள் ஒதுக்கப்பட வேண்டும்.



ஆனால், சிபாரிசு பெற்றவர்களுக்கும், அரசு ஊழியர் அல்லாத நபர்களுக்கும் வீடுகள் ஒதுக்குவதாகவும், வேண்டுமென்றே விண்ணப்பங்களை கிடப்பில் போடுவதாகவும் புகார்கள் எழுந்துள்ளன. முறைகேட்டை தடுக்க, புதிய நடைமுறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.



இதுகுறித்து, வீட்டு வசதி வாரிய அதிகாரிகள் கூறியதாவது:முறைகேட்டை தடுக்க, புதிய திட்டம் உருவாக்கப்பட்டு உள்ளது. இதற்காக, வாடகை குடியிருப்புகள் குறித்த அனைத்து விவரங்களை, 'ஆன்லைன்' முறையில் கண்காணிக்க, பிரத்யேக இணையதளம் உருவாக்கப்பட்டு உள்ளது.



விண்ணப்பங்கள் பதிவு, விண்ணப்பங்களை வரிசைபடுத்துதல், ஒதுக்கீடு, வீடு ஒப்படைப்பு போன்ற பணிகள், ஆன்லைன் முறையில் கண்காணிக்கப்படும்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்து உள்ளனர்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement