Ad Code

Responsive Advertisement

இன்று வாக்காளர் உறுதிமொழி ஏற்பு தேர்தல் கமிஷன் சிறப்பு ஏற்பாடு

தமிழகத்தில், இன்று வாக்காளர் உறுதிமொழி ஏற்பு நாளாக அறிவிக்கப்பட்டு உள்ளது. அனைத்து தரப்பு மக்களும், 'ஓட்டுக்கு பணம் வாங்க மாட்டோம்; பணம் கொடுப்பவர்களை பிடித்து கொடுப்போம்' என, உறுதிமொழி எடுக்க வேண்டும் என, தேர்தல் கமிஷன் அறிவுறுத்தி உள்ளது.


இன்று மட்டும், ஒரு கோடி மக்களை உறுதிமொழி ஏற்க வைக்க, தேர்தல் கமிஷன் முடிவு செய்துள்ளது. 'வாக்காளர் உறுதிமொழி ஏற்பு நாள்' குறித்து, சமூக வலைதளங்களில், பிரசாரம் மேற்கொள்ளப்பட்டு உள்ளது.தமிழகத்தில் உள்ள, 66 ஆயிரம் ஓட்டுச்சாவடிகளிலும், இன்று காலை, 10:00 மணிக்கு, குறைந்தது, 50 வாக்காளர்களை அழைத்து, உறுதிமொழி ஏற்கச் செய்யும்படி, ஓட்டுச்சாவடி அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. 


அனைத்து அரசு அலுவலகங்கள், குடியிருப்பு சங்கங்கள், கிளப்புகள் போன்றவற்றில், வாக்காளர் உறுதிமொழி ஏற்கும்படி, அனைத்து மாவட்ட கலெக்டர்களும், கடிதம் எழுதி உள்ளனர். உறுதிமொழி எடுப்போர், அந்த புகைப்படங்களை, தேர்தல் கமிஷன் இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய, ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.அதேபோல், அனைத்து அரசியல் கட்சியினரும், உறுதிமொழி எடுக்கும்படி அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement