பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள், நாளை வெளியாகின்றன. 19ம் தேதி முதல் இணையதளத்திலும், 21ம் தேதி முதல் பள்ளிகளிலும், தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் கிடைக்கும் என, கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து, அதிகாரிகள் மேலும் கூறியதாவது:பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள், நாளை காலை, 10:31 மணிக்கு வெளியிடப்படுகின்றன.
lதேர்வர்களின் பிறந்த தேதி மற்றும் பதிவு எண் மூலம், www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in ஆகிய இணையதளங்களில் தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்பள்ளிகள், மாவட்ட கலெக்டர் அலுவலகங்களில் உள்ள தேசிய தகவலியல் மையங்கள், அனைத்து மைய மற்றும் கிளை நுாலகங்களில் தேர்வு முடிவுகளை கட்டணமின்றி தெரிந்து கொள்ளலாம்தேர்வர்கள் மே, 19ம் தேதி தற்காலிக மதிப்பெண் சான்றிதழை, இணையதளத்தில் தாங்களே பதிவிறக்கம் செய்யலாம் மே, 21ம் தேதி முதல், தேர்வர்கள் தாங்கள் படித்த அல்லது தேர்வு எழுதிய பள்ளியில், தற்காலிக மதிப்பெண் சான்றிதழை பெறலாம்விடைத்தாள் நகல் மற்றும் மதிப்பெண் மறு கூட்டலுக்கு பள்ளிகள் மூலம், நாளையும், நாளை மறுநாளும் விண்ணப்பிக்கலாம். இவ்வாறு அவர்கள் தெரிவித்து உள்ளனர்.
மே 23ல் சி.பி.எஸ்.இ., தேர்வு முடிவுகள்:மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ.,யின் பிளஸ் 2 தேர்வு முடிவுகள், மே, 23ம் தேதி வெளியாகும் என தெரியவந்துள்ளது. நாடு முழுவதும் கேந்திரிய வித்யாலயா, நவோதயா வித்யாலயா பள்ளிகள், தனியார் பள்ளிகளில், சி.பி.எஸ்.இ., பாடப்பிரிவில், பிளஸ் 2 தேர்வுகள் நடத்தப்பட்டுள்ளன. தேர்வு முடிவுகள் மே, 23ல் வெளியாகும் என, தகவல் வெளியாகி உள்ளது.
தமிழகத்தில், 55 ஆயிரம் பேர் உட்பட, நாடு முழுவதும், 15 லட்சம் பேர் தேர்வு எழுதியுள்ளனர்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை