Ad Code

Responsive Advertisement

ஆசிரியருக்கு வெட்டு: மாணவன் கைது

சரியாக படிக்காததால் தட்டிக்கேட்ட ஆசிரியரை, கத்தியால் வெட்டிய மாணவன் கைது செய்யப்பட்டான்.வேலுார் மாவட்டம், திருப்பத்துார், தென்றல் நகர் பகுதியைச் சேர்ந்தவர் பாபு, 52; ராமகிருஷ்ணா அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்.இதே பள்ளியில், ஜார்ஜ்பேட்டையைச் சேர்ந்த, 16 வயது மாணவன் ஒருவன், பிளஸ் 1 தேர்ச்சி பெற்று, பிளஸ் 2 செல்ல இருக்கிறான். அந்த மாணவன், ஆசிரியர் பாபுவிடம் டியூஷன் படித்து வந்தான். சரியாக படிக்காத அந்த மாணவனை, ஆசிரியர் பாபு பலமுறை திட்டியுள்ளார்.


ஆனால், டியூஷனிலும் சரியாக படிக்காததோடு, அங்கு வந்த ஒரு மாணவியை கேலி செய்துள்ளான். இதனால் ஆசிரியர் பாபு, மாணவனை திட்டியுள்ளார். இந்நிலையில் நேற்று காலை, 6:30 மணியளவில் வழக்கம்போல் ஆசிரியர் பாபு, அப்பகுதியிலுள்ள கோவிலுக்கு சென்றுவிட்டு வீட்டுக்கு திரும்பினார். அப்போது, வழியில் நின்றிருந்த அந்த மாணவன், ஆசிரியருக்கு வணக்கம் தெரிவிப்பது போல் பாவ்லா காட்டிவிட்டு, மறைத்து வைத்திருந்த கத்தியால் வெட்டினான்.



இதில், ஆசிரியர் பாபுவின் கையில் வெட்டுக் காயம் ஏற்பட்டது. அதிர்ச்சி அடைந்த பாபு கூச்சலிட்டார்; அக்கம்பக்கத்தினர் திரண்டு வந்தனர். அங்கு, கத்தியோடு நின்றிருந்த மாணவனை பிடித்து, தர்ம அடி கொடுத்து, திருப்பத்துார் டவுன் போலீசில் ஒப்படைத்தனர்.
ஆசிரியர் பாபு புகாரை அடுத்து மாணவனை கைது செய்த போலீசார், விசாரணை நடத்தி வருகின்றனர்.

Post a Comment

1 Comments

  1. அந்த பன்னாட பரதேசியை அங்கேயே சாகடித்து இருக்கனும்..இதெல்லாம் எங்க உருப்படப்போகுது...

    ReplyDelete

அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..

நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.

2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.

3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.

4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை

Ad Code

Responsive Advertisement