Ad Code

Responsive Advertisement

தமிழ் புத்தாண்டு: முதல்வர் ஜெயலலிதா, வாழ்த்து

'புதிய சாதனைகள் படைப்போம் என, தமிழ் புத்தாண்டில் உறுதியேற்போம்' என, முதல்வர் ஜெயலலிதா, தமிழ் புத்தாண்டு வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார்.வாழ்த்து செய்தியில் முதல்வர் ஜெ., கூறியிருப்பதாவது: 


சித்திரை முதல் நாளாம், தமிழ் புத்தாண்டு மலர்கின்ற, இந்த பொன்னாளில், தமிழக மக்கள் அனைவருக்கும், தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். உலகிலேயே தொன்மையும், இலக்கிய வளமும் நிறைந்த, தமிழ் மொழியை பேசும், மூத்த குடிமக்களான தமிழ் பெருமக்கள், ஆண்டாண்டு காலமாக, சித்திரை முதல் நாளை, தமிழ் புத்தாண்டாக கொண்டாடி வருகின்றனர்.வலிமையும், வளமும் மிக்க, தமிழகம் வளர்ச்சி பாதையில் தொடர, அனைவரும் ஒன்றுபட்டு நிற்போம்; ஊக்கத்தோடு உழைப்போம்; புதிய சாதனைகளை படைப்போம் என, மலரும் இப்புத்தாண்டில் உறுதியேற்போம். 


இந்த இனிய புத்தாண்டில், தமிழர்களின் வாழ்வில் மகிழ்ச்சி பொங்கட்டும்; வாழ்வு செழிக்கட்டும்; நலங்கள் தழைக்கட்டும். வளங்கள் பெருகட்டும்; வெற்றிகள் தொடரட்டும்.மலையாள புத்தாண்டு: மலையாள மொழி பேசும் மக்கள் கொண்டாடும், புத்தாண்டு திருநாளாம், 'விஷூ' திருநாளில், அம்மக்களுக்கு புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். உலகில் எங்கு வாழ்ந்தாலும், தங்கள் பண்பாட்டையும், பாரம்பரிய மரபுகளையும் பேணிக்காத்து வாழும், மலையாள மக்கள் வாழ்வில், இந்த புத்தாண்டு வசந்தத்தையும், அன்பையும், அமைதி யையும் வழங்கும் ஆண்டாக மலரட்டும் என வாழ்த்தி, 'விஷூ' திருநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.இவ்வாறு வாழ்த்து செய்தியில் கூறப்பட்டுள்ளது.


Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement