Ad Code

Responsive Advertisement

மாற்றுத்திறனாளிகளுக்கு வசதிகள்: பல்கலைகளுக்கு யு.ஜி.சி., கெடு

'மாற்றுத்திறனாளி மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களுக்கான அடிப்படை வசதிகளை, ஒரு மாதத்திற்குள் செய்து தர வேண்டும்' என, பல்கலை மற்றும் கல்லுாரிகளுக்கு, பல்கலை மானியக் குழுவான, யு.ஜி.சி., கெடு விதித்துள்ளது.


பொது இடங்கள், கல்வி நிறுவனங்கள், வணிக நிறுவனங்கள் உள்ளிட்டவற்றில், மாற்றுத் திறனாளிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தர, 15 ஆண்டுகளுக்கு முன், மத்திய அரசு சட்டம் இயற்றியது. ஆனால், இந்த சட்டம் சரிவர செயல்படுத்தப்படவில்லை. உச்ச நீதிமன்றத்தில் பல வழக்குகளும் விசாரணைக்கு வந்து, அனைத்து அரசு துறைகளுக்கும், இது குறித்த வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளன.


'பல்கலைகள் மற்றும் கல்லுாரிகளில், மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு அடிப்படை வசதிகள் இல்லை' என, யு.ஜி.சி.,க்கு புகார்கள் வந்தன. யு.ஜி.சி., விசாரணை நடத்தியதில், பல கல்வி நிறுவனங்களில் அடிப்படை வசதி இல்லாதது கண்டுபிடிக்கப்பட்டு, 'நோட்டீஸ்' தரப்பட்டுள்ளது.


இந்நிலையில், அனைத்து பல்கலை மற்றும் கல்லுாரிகளுக்கு, யு.ஜி.சி., கண்டிப்பான உத்தரவு பிறப்பித்துள்ளது. 'அனைத்து கல்வி நிறுவனங்களும் உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலின் படி, மாற்றுத்திறனாளி மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களுக்கு, ஒரு மாதத்திற்குள் அடிப்படை வசதிகளை செய்து, அதன் ஆவணங்களுடன், யு.ஜி.சி.,க்கு அறிக்கை அனுப்ப வேண்டும்' என, அதில் கூறப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement