Ad Code

Responsive Advertisement

தேர்வு அறையில் காலணி, பெல்ட் அணிய தடை 'தொள தொள' உடையுடன் மாணவர்கள் அவதி

பிளஸ் 2 மற்றும், 10ம் வகுப்பு மாணவர்கள், தேர்வு அறைக்குள் காலணிகள் மற்றும் பெல்ட் அணிய தடை விதிக்கப்பட்டுள்ளது. அதனால், பல மாணவர்கள், 'தொள தொள' உடையுடன் அவதிப்படுகின்றனர்.பிளஸ் 2 பொதுத்தேர்வு, மார்ச், 4ல் துவங்கியது. தேர்வு அறைக்குள் மாணவ, மாணவியர் எப்படி வர வேண்டும் என, தேர்வு அறை கண்காணிப்பாளர்களுக்கு, தேர்வுத் துறையால் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

'கண்காணிப்பாளர்கள், தேர்வு அறையின் நுழைவாயிலில் நின்று தேர்வர்களின் நுழைவு சீட்டை சரிபார்க்க வேண்டும். அவர்கள் காலணி, பெல்ட் போன்றவற்றை வெளியில் வைத்து விட்டு, அவரவர் இருக்கையில் அமர செய்ய வேண்டும்' என, அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.



இதனால், மாணவ, மாணவியரை பெல்ட், 'ஷூ', சாக்ஸ் மற்றும் காலணிகளை கழற்றி விட்டு வர, ஆசிரியர்கள் கட்டாயப்படுத்துகின்றனர். பல மாணவர்கள், பெல்ட்டை கழற்ற வெட்கப்படுகின்றனர். பெல்ட்டை கழற்றினால், உடைகள் தொள தொளவென, இடுப்புக்கு கீழே இறங்கும் நிலை உள்ளது.



பல மாணவர்கள், முன்னர் குண்டாக இருந்த போது தைத்த உடைகள் தற்போது மெலிந்த நிலையில் பெரிதாகி விட்டது. ஆனால், கண்டிப்பாக பெல்டை கழற்ற ஆசிரியர்கள் நிர்ப்பந்தப்படுத்துவதால், தேர்வையும் எழுத முடியாமல், உடை கீழே இறங்கி விடுமோ என்ற பயத்திலும் அவதிப்படுகின்றனர்.



தனி மனித உரிமை பறிப்பு:

இதுகுறித்து, பெற்றோர் கூறியதாவது: தேர்வு அறையில், போதிய மின் விசிறி வசதி இல்லை. போதிய வெளிச்சமில்லாத வகுப்பறைகள் தேர்வு அறைகளாக மாற்றப்பட்டுள்ளன. இப்படி உட்கட்டமைப்பில் கவனம் செலுத்தாமல், 'காலணியை கழற்று; பெல்டை வெளியே போடு' என, ஆசிரியர்கள் தொல்லை செய்கின்றனர்.ஆசிரியர்களிடம் கேட்டால், தேர்வுத்துறை அதிகாரிகளிடம் கேட்க சொல்கின்றனர். ஆடை அணிவது தொடர்பான தனி மனித உரிமை மற்றும் ஒழுக்க பண்புகளை பறித்து, தேர்வு அறையில் கட்டுப்பாடு விதிப்பது அதிர்ச்சிகரமாக உள்ளது.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement