பிளஸ் 2 தேர்வு முறையாக நடத்தப்படுகிறதா; மாணவர்கள் பாடங்களை புரிந்து எழுதுகின்றனரா என்பதை, அண்ணா பல்கலை அதிகாரிகள் பார்வையிட தேர்வுத்துறை அனுமதி அளித்துள்ளது. பிளஸ் 2 பொதுத்தேர்வு, மார்ச், 4ல் துவங்கியது. தமிழ் மற்றும் முதல் மொழி பாட தேர்வில், இரண்டு தாள்களுக்கும், ஆங்கில பாடத்தில் இரண்டு தாள்களுக்கும் தேர்வு முடிந்துள்ளது. முக்கிய பாடங்களுக்கு, மார்ச், 14ல் தேர்வு துவங்க உள்ளது.
பிளஸ் 2 தேர்வு முடிவு வந்த பின், அண்ணா பல்கலையில் இன்ஜி., கவுன்சிலிங் நடக்கும். இதில், முக்கிய பாடங்களின் மதிப்பெண் தான் கணக்கில் எடுக்கப்பட்டு, மாணவர் சேர்க்கப்படுவர். ஆனால், பிளஸ் 2 தேர்வில் நல்ல மதிப்பெண் பெற்று, இன்ஜி., படிப்பில் சேர்ந்து முதல் செமஸ்டரின் பல பாடங்களில் தேர்ச்சி பெறுவதில்லை என்ற புகார் உள்ளது.
அதனால், பிளஸ் 2 முக்கிய பாட தேர்வுகள் எப்படி நடக்கின்றன; மாணவர்கள் புரிந்து கொண்டு தேர்வை எழுதுகின்றனரா என்பதை, அண்ணா பல்கலை அதிகாரிகள் பார்வையிட, தேர்வுத்துறை அனுமதி அளித்துள்ளது. இதற்காக, 30 இன்ஜி., கல்லுாரி ஆசிரியர்கள் மற்றும் அண்ணா பல்கலை தேர்வுத்துறை அதிகாரிகள் குழு அமைக்கப்பட்டுள்ளது.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை