Ad Code

Responsive Advertisement

மழை விடுமுறையை ஈடுகட்ட பள்ளிகள் செய்யப் போவது என்ன?

சென்னை உட்பட தமிழகத்தின் ஒரு சில மாவட்டங்களில் மழை காரணமாக கடந்த 15 நாட்களுக்கும் மேலாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.பொதுவாகவே, எதிர்பாராத விடுமுறைகளை ஈடுகட்ட, பள்ளிகள் சனிக்கிழமைகளில்இயங்குவது வழக்கம்.

ஆனால், பள்ளிகளில் சிறார்களுக்கான வகுப்புகளுக்குபொதுவாக சனிக்கிழமைகளில் வகுப்புகள் நடத்துவது இல்லை. ஆனால், இந்த அளவுக்கு விடுமுறையை ஈடுகட்ட வேண்டும் என்றால், எல்கேஜி மற்று யுகேஜிவகுப்புகளுக்கும் இனி சனிக்கிழமைகளிலும் பள்ளிகளை இயக்க வேண்டிய நிலைஏற்பட்டுள்ளது.சனிக்கிழமைகளில் அரைநாள் பள்ளியை நடத்தும் வழக்கத்தை மாற்றி இனி முழுநாள் பள்ளியாக செயல்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.மேலும், அரையாண்டு விடுமுறையை தாமதமாகத் துவக்கி, 10 முதல் 15 நாட்கள் விடப்படும் விடுமுறையை ஓரிரு நாட்களாகக் குறைக்கவும் வாய்ப்புள்ளது.

சில பள்ளிகளில், அரையாண்டு விடுமுறையை முன்னிட்டு எந்த சுற்றுலாப் பயணத் திட்டத்தையும் வகுத்துக் கொள்ள வேண்டாம் என்று பெற்றோருக்கு அறிவுறுத்தப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.சில பள்ளிகளில் 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு, பள்ளி இயங்கும்நேரத்தை கூடுதலாக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.எது எப்படி இருந்தாலும், பள்ளிச் செல்லும் சிறார்களுக்கும், அவர்களது பெற்றோர்களுக்கும், மாலை நேரத்தில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் செய்தியாக இருப்பது, நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறையா என்பதே.. 

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement