Ad Code

Responsive Advertisement

வேலூரில் 1,317 பள்ளிக் கட்டிடங்கள் மழையால் பலத்த சேதம்: அரசுக்கு கல்வித் துறை அறிக்கை

வேலூர் மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையால் 1,317 அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிக் கட்டிடங்கள் சேதமடைந்துள்ளதாக அரசுக்கு பள்ளிக்கல்வித் துறை அறிக்கை அனுப்பியுள்ளது.


தமிழகத்தில் கடந்த 2 வாரங்களாக கனமழை பெய்து வருகிறது. வேலூர் மாவட்டத்தில், தொடர் மழை காரணமாக பல்வேறு பள்ளிகளில் மழைநீர் சூழ்ந்துள்ளது. அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிக் கட்டிடங்கள் மழையால் சேதமடைந்துள்ளதாக அரசுக்கு புகார் சென்றது. இந்நிலையில், வேலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிக் கட்டிடங்களை ஆய்வு செய்து அதற்கான அறிக்கைகளை சமர்ப்பிக்கும்படி பள்ளிக்கல்வித் துறைக்கு அரசு உத்தரவிட்டது.

அதன்படி, வேலூர் மற்றும் திருப்பத்தூர் கல்வி மாவட்டத்துக்கு உட்பட்ட பகுதிகளில்உள்ள அரசு மற்றும் நிதியுதவி பெறும் பள்ளிகளை ஆய்வு செய்து, அதற்கான விவரங்களை தரும்படி, மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு மாவட்டமுதன்மை கல்வி அலுவலர் பூபதி உத்தரவிட்டார்.வேலூர் மாவட்டத்தில் தொடக்கக் கல்வித் துறை கட்டுப்பாட்டில் 1,881 பள்ளிகளும், 256 அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளும், 267 அரசு உயர்நிலைப் பள்ளிகளும், 87 அரசு நிதியுதவி பெறும் உயர்நிலைப் பள்ளிகளும் உள்ளன.இவற்றில், 336 தொடக்கப் பள்ளிகள், 890 நடுநிலை மற்றும் உயர்நிலைப் பள்ளிகள், 91 மேல்நிலைப் பள்ளி கட்டிடங்கள் மழையால் சேதமடைந்துள்ளன.


2 தொடக்கப் பள்ளிகளில் கழிப்பறைகள் முழுமையாக இடிந்து சேதமடைந்துள்ளன. 139 பள்ளிக் கட்டிடங்களில் மழைநீர் கசிவு ஏற்பட்டுள்ளது. 270 வகுப்பறைகள் சேதமடைந்துள்ளன. மின் சாதனங்கள் பாதிப்பு ஏதும் இல்லை என ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.இதற்கான அறிக்கை தயார் செய்யப்பட்டு அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக வேலூர் மாவட்ட பள்ளிக்கல்வித் துறை தெரிவித்துள்ளது. 

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement