வரும், 2016 ஜனவரி 1 முதல், ஏழாவது சம்பள கமிஷன் பரிந்துரைப்படி சம்பளம் வழங்க வேண்டியிருப்பதால், ஏற்படும் நிதிச்சுமையை எண்ணி, நகராட்சி நிர்வாகங்கள் அச்சமடைந்துள்ளன. 
கடந்த, 2007ல் நகராட்சிகளில் சொத்துவரி உயர்த்தப்பட்டது. வழக்கமாக ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை சொத்து வரி உயர்த்தப்படும்.
இந்த வரி உயர்வு சீராக இருந்தால், ஊழியர்களின் சம்பளம் உயரும்போது ஏற்படும் நிதிச்சுமையை சமாளிப்பது எளிது. ஆனால், 2007க்கு பின், ஐந்து ஆண்டுகள் கழித்து, 2013ல் சொத்துவரி உயர்த்தப்படவில்லை. இதனால், நகராட்சிகளின் வருவாய், 2007க்கு பின் உயரவில்லை.
இந்நிலையில் 2016 ஜன., 1 முதல் ஏழாவது சம்பள கமிஷன் அடிப்படையில் ஊழியர்களுக்கு சம்பள உயர்வு வழங்க வேண்டி உள்ளது. இந்த சம்பள உயர்வு சில மாதங்கள் கழித்து அமல்படுத்தப்பட்டாலும், 2016 ஜன., 1யை அடிப்படையாக கொண்டு நிலுவைத்தொகை வழங்க வேண்டி இருக்கும்.
வரி வருவாய் உயராத நிலையில், ஏழாவது சம்பளக் கமிஷனால் ஏற்படும் சம்பள உயர்வு நிதிச்சுமையை எப்படி சமாளிப்பது என்ற அச்சம் நகராட்சி நிர்வாகங்களுக்கு ஏற்பட்டுள்ளன.
ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவதற்கு ஏற்ப, நகராட்சியின் வரி வருவாய் உயர்வுக்கு அரசு ஏற்பாடு செய்ய வேண்டும் அல்லது அதற்கேற்ப மானியத்தொகையை வழங்க வேண்டும் என, அரசிடம் வலியுறுத்தி வருகின்றன.
 
 
 
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை