Ad Code

Responsive Advertisement

தலைமையிடத்தில் தங்கி இருக்க வேண்டும்: மழையால் கல்வி அதிகாரிகளுக்கு கிடுக்கிப்பிடி

'தொடர் மழை எதிரொலியாக, பள்ளி மாணவ, மாணவியர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், சம்பந்தப்பட்ட மாவட்ட கல்வி அதிகாரிகள், மாவட்ட தலைமையிடத்தில் தங்கியிருக்க வேண்டும்' என, மாவட்ட தொடக்க கல்வி அலுவலர்களுக்கு, மாநில தொடக்க கல்வி இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில், வடகிழக்கு பருவமழையால் பல மாவட்டங்களில் பலத்த சேதம் அடைந்த நிலையில், பள்ளி மாணவரின் நலன் தொடர்பாக, முன்னேற்பாடு குறித்து, அனைத்து தொடக்க கல்வி அலுவலர்களுக்கும், மாநில தொடக்க கல்வி இயக்குனர், சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில் கூறியிருப்பதாவது: பள்ளிகளின் மேற்கூரையில், மழைநீர் தேங்காத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். கட்டடங்களில் விரிசல் ஏற்பட்டால், உடனடியாக அதை சரி செய்ய வேண்டும்.

பள்ளிகளுக்கு அருகில் ஆறு, ஏரி, குளம் உள்ளிட்ட நீர்ப்பிடிப்பு பகுதிகள் இருந்தால், அதன் அருகில் மாணவ, மாணவியர் செல்லாத வகையில் ஆசிரியர்கள் கண்காணிக்க வேண்டும். உணவு இடைவேளை, காலை, மாலை நேரங்களில் மாணவ, மாணவியரின் வருகை எண்ணிக்கையை சரிபார்க்க வேண்டும். பள்ளி வளாகத்தில் மின் கசிவு ஏற்பாடாத வகையில் பராமரிக்க வேண்டும். பள்ளியில் உள்ள குடிநீர் தொட்டி, கழிப்பறை ஆகியவற்றை சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.

தொற்று நோய் பாதிப்பு ஏற்படாமல் இருக்கும் வகையில், குடிநீரை காய்ச்சி குடிக்க வலியுறுத்தல் வேண்டும். பருவ மழை நீடிக்க வாய்ப்புள்ளதால், மாவட்ட தொடக்க கல்வி அலுவலர்கள், உதவி தொடக்க கல்வி அலுவலர்கள், அவர்களின் தலைமையிடத்தில் கட்டாயம் தங்கியிருக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement