Ad Code

Responsive Advertisement

இறுதி வாக்காளர் பட்டியல் இணையத்தில் வெளியீடு : தேர்தல் அலுவலர் அறிவிப்பு

தமிழகத்தில் பெயர் சேர்த்தல் திருத்தம் குறித்த வாக்காளர் பட்டியல் இறுதிபடுத்தபட்டு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. வீடு தோறும் சோதனைக்கு வரும் வாக்கு சாவடி அதிகாரிகளுக்கு ஒத்துழைப்பு தர வேண்டும் என தேர்தல் அலுவலர் கேட்டு கொண்டுள்ளார். இது குறித்து மாநில தேர்தல் அலுவலர் அறிவிப்பு:  

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் 2016ம் ஆண்டு வருகிறது. ஆண்டு தோறும் வாக்காளர் பட்டியலை தேர்தல் ஆணையம் சரிபார்த்து வெளியிட்டு வருகிறது. இதற்காக தமிழகம் முழுதும் பல்வேறு முகாம்களை நடத்தி வாக்காளர் பட்டியல் சரிபார்க்கப்பட்டது. இதற்காக முகாம்களில் பொதுமக்கள் பெயர் சேர்த்தல் , நீக்கம், மாற்றம், விலாச மாற்றம், புதிய வாக்காளர் சேர்ப்பு ஆகியவற்றுக்காக படிவங்கள் வழங்கப்பட்டது.

இதனடிப்படையில்  இறுதி படிவங்கள் கடந்த செப்டம்பர் 15 முதல் அக்டோபர் 24 வரை பெறப்பட்டது. மேலும் எஸ்.எம்.எஸ், ஈமெயில் மூலமும் பெறப்பட்ட விபரங்கள் அனைத்தும் அந்தந்த மாவட்ட தேர்தல் அலுவலர்களால் தீவிரமாக பரிசீலிக்கப்பட்டது. இதற்கான இறுதிகட்ட ஆய்வை மேற்கொள்ள வாக்கு சாவடி அதிகாரிகள் வீடுதோறும் வர உள்ளனர். அவர்களுக்கு வாக்காளர்கள் ஒத்துழைப்பு அளிக்கும் படி கேட்டுகொள்கிறோம். 

மேலும் இதற்கான விபரங்களை தேர்தல் ஆணைய இணையதளமான election.tn.gov.in என்ற தளத்தில் பார்க்கலாம். மேலும் வாக்காளர்கள் தங்கள் செல்போன் எண்களை அளித்தால் அவ்வப்போதைய தகவல்கள் குறுஞ்செய்தியாக அனுப்பி வைக்கப்படும். இவ்வாறு தேர்தல் அலுவலர் தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement