Ad Code

Responsive Advertisement

குரூப் - 1 தேர்வு: 2.14 லட்சம் பேர் பங்கேற்பு

அரசு துறைகளில் காலியாக உள்ள, 74 இடங்களை நிரப்புவதற்கான, 'குரூப் - 1' முதல்நிலைத் தேர்வில், 2.14 லட்சம் பேர் பங்கேற்றனர். தமிழக அரசுத் துறையில், துணை கலெக்டர், காவல் துறை துணை கண்காணிப்பாளர் பணி உட்பட, 74 காலியிடங்களுக்கான, குரூப் - 1 முதல் நிலைத் தேர்வு நேற்று நடந்தது. 

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., சார்பில், சென்னையில், 126 மையங்கள் உட்பட தமிழகம் முழுவதும், 725 மையங்களில் தேர்வு நடந்தது. இதில், மாநிலம் முழுவதும், 2.14 லட்சம் பேர் தேர்வு எழுதினர்.

டி.என்.பி.எஸ்.சி., தலைவர் அருள்மொழி, செயலர் விஜயகுமார் மற்றும் தேர்வுக் கட்டுப்பாட்டு அதிகாரி ஷோபனா ஆகியோர், சென்னையிலுள்ள சில தேர்வு மையங்களை ஆய்வு செய்தனர். அருள்மொழி கூறுகையில், ''விரைவில் இந்தத் தேர்வுக்கான, 'கீ - ஆன்சர்' வெளியாகும். குரூப் - 4 பணியிடங்களுக்கான காலியிடப் பட்டியல் அரசிடமிருந்து வந்ததும் நிரப்பப்படும்,'' என்றார்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement