தமிழகத்தில், 1.5 லட்சம் மாணவர்கள் பங்கேற்ற, தேசிய திறனாய்வு தேர்வில், ஒரு வினாவுக்கு, தவறான விடை கொடுத்திருந்ததால், மாணவர்கள் குழப்பம் அடைந்தனர். பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு ஆராய்ச்சி படிப்பு வரை, மத்திய அரசின் கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. இதற்கு இரண்டு கட்ட தேசிய திறனாய்வுத் தேர்வை எழுத வேண்டும்.
மாநில அளவிலான முதற்கட்ட தேர்வு, நேற்று தமிழகம் முழுவதும் நடந்தது. இதில், 6,766 பள்ளிகளைச் சேர்ந்த, 1.5 லட்சம் மாணவர்கள் பங்கேற்றனர். அறிவுத்திறன் தேர்வு, கல்வித்திறன் தேர்வு என, இரண்டு தாள்களுக்கு தலா, 100 மதிப்பெண்களுக்கு தேர்வு நடந்தது. முதல் தாளில், 50 மதிப்பெண்களுக்கு ஆங்கில இலக்கணத் தேர்வு உண்டு.
இதில், குறைந்தபட்சம், 20 மதிப்பெண்கள் பெற்றால் தான், மற்ற கேள்விகளுக்கு விடைகள் திருத்தப்படும்; தேர்விலிருந்து மாணவர் நீக்கப்படுவார். நேற்றைய தேர்வில், முதல் தாளில், சிந்தனை மற்றும் கணிதத் திறன் குறித்த, 25ம் எண் கேள்விக்கு, வினாத்தாளில் கொடுக்கப்பட்ட நான்கு விடைகளும் தவறாக இருந்தன.
அந்தக் கேள்விக்கு, 'ரூட்' அடையாளத்துடன், 90 (√90) என்பது விடையாக வர வேண்டும். ஆனால், அந்த விடை கொடுக்கப்படவில்லை. அதனால், மாணவர்கள் நீண்ட நேரம் குழப்பம் அடைந்தனர். இந்த கேள்விக்கு எப்படி மதிப்பெண் வழங்கப்படும் என, தேர்வு மையத்தில் எந்த அறிவிப்பும் வழங்கப்பவில்லை.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை