Ad Code

Responsive Advertisement

பள்ளிக்கல்வித்துறை சுற்றறிக்கை - திறந்தவெளி கழிப்பிடங்களை ஒழிக்க தெருவுக்கு ஒரு மாணவரை சுகாதார தூதராக நியமிக்க உத்தரவு

பள்ளிக்கல்வித் துறை பள்ளிகளுக்கு அனுப்பிய சுற்றறிக்கை: தமிழகம் முழுவதும் திறந்தவெளி கழிப்பிடமில்லா ஊராட்சிகளை ஏற்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரிகள் பள்ளிகளில் காலை, மாலை இறைவணக்கத்தில் திறந்தவெளி கழிப்பிடத்தால் உருவாகும் சுகாதார கேட்டினை மாணவ,  மாணவியருக்கு விளக்க வேண்டும்.  பள்ளிகளில் உள்ள கழிப்பறையை மாணவ, மாணவியர் பயன்படுத்த செய்ய வேண்டும். 

கிராமங்கள், நகரங்களில்  கழிப்பறை  இல்லாத வீடுகள் விவரம் அறிந்து தனிநபர் இல்ல கழிப்பறை கட்ட ஆசிரியர்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.  பொதுநலனில் ஆர்வமுள்ள மாணவ, மாணவியரை ஒவ்வொரு தெருவிற்கும் ஒருவர் வீதம் சுகாதார தூதுவர்களாக நியமிக்க வேண்டும். இந்த சுகாதார தூதுவர்கள் அந்தந்த தெருக்களில் சுகாதாரம் பேண நடவடிக்கை எடுக்க வேண்டும். திறந்தவெளி கழிப்பிடத்தை பயன்படுத்த மாட்டோம் என மாணவர்களிடம் ஆசிரியர்கள் உறுதிமொழி கடிதம் பெற வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement