மகப்பேறு, குழந்தைகள் நல சுகாதார அலுவலர் பதவிக்கான தேர்வு தமிழகம் முழுவதும் 3 மாவட்டங்களில் வருகிற 20ம் தேதி நடக்கிறது. தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம்(டிஎன்பிஎஸ்சி) மகப்பேறு மற்றும் குழந்தை நல சுகாதார அலுவலர் பதவியில் காலியாக உள்ள 89 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை கடந்த ஜூலை 31ம் தேதி வெளியிட்டது.
கல்வி தகுதியாக பி.எஸ்.சி. நர்சிங் அல்லது பிஎஸ்சி(பப்ளிக் ஹெல்த் நர்சிங்) படித்திருக்க ேவண்டும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்கான எழுத்து தேர்வு வருகிற 20ம் தேதி சென்னை, மதுரை, கோவை உள்ளிட்ட 3 மாவட்டங்களில் நடக்கிறது.
காலை 10 மணி முதல் 1 மணி வரை முதல் தாள் தேர்வும், பிற்பகல் 2.30 மணி முதல் 4.30 மணி வரை இரண்டாம் தாள் தேர்வும் நடைபெறுகிறது. காலை 10 மணிக்கு தேர்வுக் கூடத்துக்கு உள்ளே வந்து விட வேண்டும். இத்தேர்வுக்கான ஹால் டிக்கெட் தேர்வாணையத்தின் இணையதளமான www.tnpsc.gov.inல் நேற்று முன்தினம் இரவு வெளியிடப்பட்டது. விண்ணப்பதாரர்கள் தங்களது விண்ணப்ப எண்ணை உள்ளீடு செய்து ஹால் டிக்கெட்டை(நுழைவு சீட்டு) டவுன் லோடு செய்து கொள்ளலாம்.
நுழைவுச் சீட்டு கிடைக்கப் பெறாத விண்ணப்பதாரர் தங்களது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுள்ளதா? என்பதை நிராகரிப்பு பட்டியலில் கண்டறியலாம். ஹால் டிக்கெட்டை டவுன்லோடு செய்து கொள்வதில் ஏதேனும் சந்தேகம் இருந்தால் 1800 425 1002 என்ற கட்டணமில்லாத தொலைபேசியிலோ அல்லது contacttnpsc@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியிலோ தொடர்பு கொண்டு தெளிவு பெறலாம் என்றும் டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை