Ad Code

Responsive Advertisement

அரசு அலுவலர்களுக்கு குறைந்த விலையில் சொந்த வீடு: சட்டப்பேரவையில் முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு

சென்னையில் குறைந்த வருவாய் பிரிவு மக்கள் வாங்கக் கூடிய வகையில் ரூ.20லட்சத்துக்கு குறைவாக இரு படுக்கை அறைகளுடன் கூடிய குடியிருப்புகளை அரசு விற்பனை செய்யும் என தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக முதல்வர் இன்று சட்டப்பேரவையில் அறிவித்தது :

"சென்னையில் குறைந்த வருவாய் பிரிவு மக்கள் வாங்கக் கூடிய விலையிலான வீட்டு வசதியை மேம்படுத்தும் நோக்கத்துடன், சென்னை அம்பத்தூரில் அனைத்து வசதிகளுடன், இரு படுக்கை அறைகளுடன் கூடிய 2,300 குடியிருப்புகள் தோராயமாக 380 கோடி ரூபாய் செலவில் தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தால் கட்டப்படும். 

ஒரு குடியிருப்பின் விலை 20 லட்சம் ரூபாய்க்குக் குறைவாக நிர்ணயம் செய்யப்படும்.அரசு அலுவலர்களுக்கு சொந்த வீடு:அரசு அலுவலர்களுக்கு சொந்த வீடு கட்டும் திட்டத்தின் கீழ் ‘சி’ மற்றும் ‘டி’ பிரிவு அரசு அலுவலர்களுக்கு சென்னை பாடிகுப்பம் மற்றும் வில்லிவாக்கம் பகுதியில் 500 பன்னடுக்கு, மாடி குடியிருப்புகள் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தால் கட்டப்படும்.

ஒவ்வொரு குடியிருப்பும் கழிப்பறைகளுடன் கூடிய இரண்டு படுக்கை அறைகள், ஒரு சமையலறை மற்றும் ஒரு உட்காரும் மற்றும் உணவு அருந்தும் கூடம் உடையதாக கட்டப்படும். ஒரு குடியிருப்பின் பரப்பளவு ஏறக்குறைய 700 சதுர அடியாக இருக்கும். இத்திட்டத்தின் உத்தேச மதிப்பீடு 225 கோடி இðட்யாகும். இக்குடியிருப்புகளுக்கான கட்டுமானம் இந்த நிதியாண்டில் தொடங்கப்படும்.

2800 குடியிருப்புகள்:

அனைத்துத் தரப்பு மக்களின் வீட்டு வசதித் தேவைகளை நிறைவு செய்யும் பொருட்டு, சென்னை, காஞ்சிபுரம், வேலூர், கடலூர், கிருஷ்ணகிரி, சேலம், மதுரை மற்றும் திருச்சிராப்பள்ளி ஆகிய மாவட்டங்களில், 674 கோடியே 96 லட்சம் ரூபாய் செலவில் பெருவாரியாக குறைந்த மற்றும் நடுத்தர வருவாய் பிரிவு மக்களுக்காக 2,800 குடியிருப்பு அலகுகள் தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தால் கட்டப்படும்.

நலிவுற்ற பிரிவினருக்கும் வீடுகள்:

தொலைநோக்குத் திட்டம் 2023-ன் குடிசை பகுதிகள் அற்ற நகர திட்டத்தின்ஒரு பகுதியாக சென்னை மாநகராட்சி உள்ளிட்ட மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகளில் நடப்பு நிதியாண்டில் மாநில அரசின் நிதி உதவியுடன் மைய அரசின் 'அனைவருக்கும் வீட்டு வசதி' திட்டத்தின் கீழ், வழங்கப்படும் மானியத்தோடும் 12,500 பொருளாதாரத்தில் நலிவுற்ற பிரிவினருக்கான குடியிருப்புகளை தமிழ்நாடு குடிசைப் பகுதி மாற்று வாரியம் கட்டும். இத்திட்டத்தின் உத்தேச மதிப்பீடு 457 கோடியே 50 லட்சம் ரூபாயாகும்.

பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும்:

மாநில முழுமையிலும் தமிழ்நாடு குடிசைப் பகுதி மாற்று வாரியம் 1.55 லட்சம் குடியிருப்புகளை கட்டியுள்ளது. இவற்றில் பல மிகவும் பழமையானவை. இயற்கை சீற்றங்களாலும், கால மாற்றங்களாலும் இவை பழுதுபட்டுள்ளன. இக்குடியிருப்புகளில் பழுது பார்ப்பு மற்றும் பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ள தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்திற்கு தமிழக அரசு, 10 கோடி ரூபாய் நிதி உதவியாக அளிக்கும்.

மதுரை துணை நகரத்தில் நலிவுற்ற பிரிவினருக்கு வீடு:மதுரை நகருக்கு அருகில் தேசிய நெடுஞ்சாலை எண்.7க்கு அருகே தோப்பூர்-உச்சப்பட்டி பகுதியில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தால் ஓர் துணை நகரம் அமைக்கப்படும் என அரசால் ஏற்கனவே அறிவிக்கப்பட்டது.அத்துணை நகரம் அமைக்கும் பணிகள் முன்னேற்றத்தில் உள்ளன. 

இத்திட்டத்தில் மேம்படுத்தப்படும் பகுதிகளில் 10 சதவீதத்தை தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் 4,500 பொருளாதாரத்தில் நலிவுற்ற பிரிவினருக்கான அலகுகளாக தமிழ்நாடு குடிசைப் பகுதி மாற்று வாரியத்திடம் ஒப்படைக்கும்.இவ்வாறு நன்கு மேம்படுத்தப்பட்ட அலகுகளை, தமிழ்நாடு குடிசை பகுதி மாற்று வாரியம், ‚அனைவருக்கும் வீட்டு வசதி‛ திட்டத்தின் கீழ், நடத்தப்பட்ட கணக்கெடுப்பில் கண்டறியப்பட்ட மதுரை நகரத்தின் ஆட்சேபகரமான புறம்போக்குகளில் வசிக்கும் குடிசைப் பகுதியினருக்கு ஒதுக்கீடு செய்யும்.

அவ்வாறு ஒதுக்கீடு செய்யப்பட்ட இடங்களில் மைய அரசு மற்றும் தமிழ்நாடு அரசுமானியத்தை பயன்படுத்தி பயனாளிகள் தாமே வீடுகள் கட்டிக் கொள்வதற்கு தமிழ்நாடு குடிசைப் பகுதி மாற்று வாரியம் உதவி செய்யும். இதன் மூலம், மதுரை நகரத்தை குடிசைப் பகுதிகள் அற்ற நகரமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement