சட்டப்பேரவையில் நேற்று பள்ளிக் கல்வித்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்குப் பதிலளித்து அமைச்சர் கே.சி.வீரமணி கூறியதாவது:
கடந்த 4 ஆண்டுகளில் அரசு பள்ளிகளில் 76 ஆயிரத்து 338 ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்பட் டுள்ளன. இலவச கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்படி 25 சதவீத இடஒதுக்கீட்டின் கீழ் தனியார் பள்ளிகளில் இதுவரை 2 லட்சத்து 17 ஆயிரத்து 43 குழந்தைகள் சேர்க்கப்பட்டுள்ளனர்.
நடப்பு கல்வி ஆண்டில் அரசுப் பள்ளிகளில் 448 உதவியாளர், 370 இளநிலை உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்படும். மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்கள், அரசு ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் 30 முதுநிலை விரிவுரையாளர், 41 விரிவுரையாளர், 18 இளநிலை விரிவுரையாளர் உட்பட 97 பணியிடங்கள் நிரப்பப்படும்.
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஒன்று முதல் 8-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களின் திறமைகளை மதிப்பிட்டு பதிவு செய்ய ரூ.8.48 கோடி செலவில் மாணவர் திரள் பதிவேடு அறிமுகப்படுத்தப்படும். ரூ.16.29 கோடி செலவில் ஆசிரி யர்கள், தலைமை ஆசிரியர்களுக்கு தலைமைப் பண்பு பயிற்சி அளிக்கப்படும். அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 9 முதல் பிளஸ் 2 வரை படிக்கும் மாணவர்கள் தேசிய திறனறிவுத் தேர்வு, ஐஐடி நுழைவுத் தேர்வு, அகில இந்திய மருத்துவ நுழைவுத் தேர்வு உள்ளிட்ட தேசிய அளவிலான தேர்வுகளில் வெற்றி பெற சிறப்புப் பயிற்சி அளிக்கப்படும்.
கோவை, கரூர், திருச்சி, திருநெல்வேலி, வேலூர், விருதுநகர் ஆகிய மாவட்ட மைய நூலகங்களில் ரூ.15 லட்சம் செலவில் போட்டித் தேர்வு பயிற்சி மையம் அமைக்கப்படும்.
அரசு மற்றும் அரசு சார்ந்த பணியிடங்களுக்கான போட்டித் தேர்வுகளுக்கு விண்ணப்பிக்கும் வகையில் சென்னை கன்னிமாரா பொது நூலகம் மற்றும் அனைத்து மாவட்ட மைய நூலகங்களிலும் இணைய வசதி ஏற்படுத்தப்படும். 10 மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்களில் ரூ.50 லட்சம் செலவில் மொழி ஆய்வகங்கள் நிறுவப்படும்.
பிளஸ் 2, எஸ்எஸ்எல்சி தேர்வெ ழுதும் மாணவர்களுக்கு ஒவ்வொரு பருவ தேர்வுக்கும் தனித்தனி பதிவெண் வழங்குவதற்கு பதிலாக அனைத்து பருவங்களுக்கும் ஒரே பதிவெண் வழங்கப்படும். பிளஸ் 2, எஸ்எஸ்எல்சி தேர்வை பல பருவங்களில் எழுதி தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு அவர்கள் ஒருங்கிணைக்கப்பட்ட மதிப்பெண் சான்றிதழ் (Consolidated Mark Certificate) வழங்கும் திட்டம் நடப்பு கல்வி ஆண்டில் அறிமுகப்படுத்தப்படும் என்றார்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை