
ஆண்ட்ராய்ட் ரூட்டிங் என்பது ஒரு மரத்தை அப்படியே பிடுங்கி, மீண்டும் நடுவது போன்றது என்று சுருக்கமாகச் சொல்லலாம். மரத்தை மண்ணிலிருந்து வேரோடு பிடுங்கி வேறொரு இடத்தில் வசதிக்கு தகுந்தவாறு மாற்றி நடுவதைப் போன்றது. இதன் மூலம் ஒரு சில இழப்புகளும் இருக்கும். பல நன்மைகளும் இருக்கும். ஆண்ட்ராய்ட் போனில் வேரைப்போன்று உள்ள செட்டிங்களை மாற்றி அமைக்கும் முறைக்கே ஆண்ட்ராய்ட் ரூட்டிங் என்று பெயர்.
ஆண்ட்ராய்ட் ரூட்டிங் செய்வதன் மூலம் நீங்கள் உங்களுடைய Android Mobile போனில் மேதிக வசதிகளைப் பெறலாம். மேலதிக வசதிகள் என்றால் custom ROM, Custom Themes, Quick Activity, Increasing Battery Life, Operating system Upgrade என்பன போன்ற மேலதிக வசிதகளைப் பெற முடியும்.
அதாவது உங்களுடைய ஆண்ட்ராய்ட் போனை நீங்கள், உங்களுடைய விருப்பத்திற்குத் தகுந்தாற்போல் மாற்றி அப்கிரேட் செய்துகொள்ள முடியும்.
Android Rotting செய்வதான் என்ன நன்மை?
பல நன்மைகள் உள்ளன. ஒன்று நீங்கள் மேற்சொன்னவைகள்தான் ஆண்ட்ராய் ஓ.எஸ்ஐ அப்கிரேட் செய்ய முடியும். சிம்பிள் பேக்கப் சொல்யூசன்ஸ், வைஃபை, யூ.எஸ்.பி தேதரிங், சிம்பிள் பேக்கப் சொல்யூசன் ஆகிய வசதிகளைப் பெற முடியும்.
பேட்டரி ஆயுள்:
ஆண்ட்ராய்ட் போனின் வேகத்தை குறைப்பதன் மூலம் பேட்டரி ஆயுளை அதிகரிக்க முடியும்.
ஆண்ட்ராய்ட் வேகம் அதிகரிக்க முடியும். வேகம் அதிகரிக்கு பேட்டரி ஆயுளின் அளவு குறையும்.
உங்களுடைய ஆண்ட்ராய்ட் போன்களின் தீமை நீங்களே மாற்றும் வசதி இதன் மூலம் கிடைக்கும்.
ஆண்ட்ராய்ட் போனை ரூட் செய்வதால் ஏற்படும் தீமைகள்:
- ஒரு சில Android Apps உங்களுடைய ஆண்ட்ராய்ட் போனில் இயங்காமல் போகும் வாய்ப்பு உள்ளது.
- அங்கீகரிக்கப்பட்ட ஆண்ட்ராய்ட் மார்க்கெட் இல்லாத தளங்களின் மூலம் தரவிறக்கம் செய்துத பயன்படுத்தும் Android Apps மூலம் வைரஸ் போன்ற தீங்கிழைக்கும் நிரல்கள் உங்களுடைய ஆண்ட்ராய்ட் போனை வந்தடையலாம்.
- ஆண்ட்ராய் போனை ஒரு முறை ரூட் செய்துவிட்டால், பிறகு ஆண்ட்ராய்ட் போனில் பிரச்னை ஏற்படும்பொழுது Warranty Claim செய்ய முடியாது.
- இவற்றையெல்லாம் நானே பார்த்துக்கொள்வேன். என்னுடைய ஆண்ட்ராய்டின் பாதுகாப்பை நானே நிர்வகித்துக்கொள்வேன் என நீங்கள் நினைத்தால் தொடர்ந்து ஆண்ட்ராய்ட் போனை ரூட்டிங் செய்வது எப்படி என்பதைப் பார்ப்போம்.
ஆண்ட்ராய்ட் போனில் ரூட்டிங் செய்யும் வழிமுறைகள்:
- முதலில் உங்களுடைய ஆண்ட்ராய்ட் போனை பேக்கப் எடுத்து வைத்துக்கொள்ளுங்கள்.
- அடுத்து உங்களுடைய ஆண்ட்ராய்ட் போன் மெமரியில் 24MB space க்கு குறையாமல் இருக்கும்படி வைத்துக்கொள்ளுங்கள்.
- அடுத்து ஆண்ட்ராய்ட் போனை கணினியில் இணைக்க வேண்டும். இதற்கு உங்களுக்கு வழங்கப்பட்ட USB டேட்டா கேபிளை நீங்கள் பயன்படுத்த வேண்டும்.
- கணினியுடன் இணைக்கப்பட்ட பிறகு செட்டிங்ஸ்==>அப்ளிகேஷன்ஸ்==>டவலப்மெண்டஸ்==> என்ற நிலையில் சென்று யூ.எஸ்.பி. டீபக்கிங் என்பதை எனேபிள் செய்துவிடுங்கள்.
- Setting==>Applications==>Development==>USB Debugging==>Enable
- அடுத்து உங்களுடைய கணினியில் சூப்பர் ஒன்கிளிக் (super one clik) மென்பொருளைத் திறக்கவும்.
- அடுத்து யூனிவர்சல் (Universal) என்பதை கிளிக் செய்து ரூட் என்பதை கிளிக் செய்யவும்.
- அடுத்து சிறிய நேர இடைவெளியில் உங்கள் ஆண்ட்ராய்ட் போன் ரூய் செய்யப்பட்டுவிடும் . அடுத்து அலவ் நன் மார்க்கெட் அப்ஸ் (Allow Non Market Apps) என்பதை கிளிக் செய்துவிடுங்கள். இனி உங்களுடைய ஆண்ட்ரோய்ட் போன் ரூட் ஆகிவிடும். நீங்கள் விரும்பிய படி உங்களுடைய ஆன்ட்ராய்ட் போனை அப்கிரேட் செய்யலாம்.
ஆண்ட்ராய்ட் போனிலிருந்து நேரடியாகவும் உங்களுடைய ஆண்ட்ராய்ட் போனை ரூட் செய்யலாம். அதற்கு பயன்படும் மென்பொருள்கள் கீழே :
யுனிவர்சல் ஆண்ரூட் 1.6.2 பீட்டா
இசட்போர்ரூட்
யுனிவர்சல் ஆண்ரூட் 1.6.2 பீட்டா
இசட்போர்ரூட்
நன்றி பிரபு.
குறிப்பு: ஆண்ட்ராய்ட் போனை ரூட்டிங் செய்யும் வழிமுறைகளும், அதனால் ஏற்படும் நன்மை தீமைகளையும் விளக்கும் விதமாகவே இப்பதிவு எழுதப்பட்டிருக்கிறது. ஆண்ட்ராட் போனில் மேற்கண்ட வழிமுறைகளை நீங்கள் செய்து பார்க்கும்பொழுது ஏற்படும் பிரச்னைகளுக்கு இத்தளம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை