Ad Code

Responsive Advertisement

திருப்பூர் குமரன், வாஞ்சிநாதன் பிறந்த நாள் அரசு விழாவாகிறது

:'சுதந்திர போராட்ட வீரர்கள், திருப்பூர் குமரன், வாஞ்சிநாதன் பிறந்த நாள் விழாக்கள், அரசு விழாவாக கொண்டாடப்படும்' என, தமிழக அரசு அறிவித்துள்ளது. சட்டசபையில், செய்தி, விளம்பரம், எழுதுப் பொருள் மற்றும் அச்சுத் துறைகள் மானியக் கோரிக்கை, பதிலுரைக்குப்பின், அமைச்சர் ராஜேந்திர பாலாஜி வெளியிட்ட அறிவிப்புகள்:



தியாகி வீர வாஞ்சிநாதன், திருப்பூர் குமரன் பிறந்த நாட்கள், அரசு விழாவாக கொண்டாடப்படும்

எம்.ஜி.ஆர்., அரசு திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவனத்தால், தற்போது கற்பிக்கப்பட்டு வரும், திரைத்தொழில் நுட்பங்களுக்கான பட்டயப் படிப்புகள் இனி, 'பேச்சுலர் ஆப் சினிமா' என்ற, இளங்கலை - திரைக்கலை பட்ட படிப்புகளாக மாற்றப்படும்

இப்பயிற்சி நிறுவனத்தில், பகுதி நேர வகுப்புகள் சுய நிதி அடிப்படையில் துவங்கப்படும். பயிற்சி நிறுவன மாணவர்களுக்கு, 'அவுட் சோர்சிங்' முறையில், ஆண்டுதோறும், 75 லட்சம் ரூபாயில், நவீன துணை கருவிகள் வாங்கப்படும்
தமிழக அரசு அச்சகத்துக்கு, 25 லட்சம் ரூபாய் செலவில், அதிக திறனுடைய, 'டிஜிட்டல் பிரின்டர்' வாங்கப்படும்.இவ்வாறு அமைச்சர் அறிவித்தார்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement