Ad Code

Responsive Advertisement

1,054 பள்ளிகளுக்கு ரூ.1,263 கோடியில் கூடுதல் கட்டடம்

'நடுநிலை மற்றும் உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்ட, 1,054 பள்ளிகளுக்கு, 1,263 கோடி ரூபாயில், கூடுதல் கட்டடங்கள் கட்டப்படும்' என, முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.சட்டசபையில் நேற்று, 110வது விதியின் கீழ், அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

* நடப்பாண்டில், ஐந்து தொடக்கப் பள்ளிகள் நடுநிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்படும்; 39 பகுதிகளில், புதிய தொடக்கப் பள்ளிகள் துவங்கப்படும்; இவற்றுக்கு, 78 ஆசிரியர் நியமிக்கப்படுவர்

* அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில், 770 கூடுதல் வகுப்பறைகள், 56 கோடி ரூபாயில் கட்டப்படும்

* ஆசிரியர்களுக்கு பணியிடை பயிற்சி அளிக்க, பெரம்பலுார், கோவையில், ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் துவங்கப்படும் 

* கடலுார், காஞ்சிபுரம், நாகப்பட்டினம், நீலகிரி, பெரம்பலுார், விழுப்புரம், திருவாரூர் மாவட்டங்களில், தொடக்கக் கல்வி பட்டய பயிற்சி பெற, ஒன்றிய ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்கள் துவங்கப்படும்

* பார்வையற்ற, ஒன்று முதல், எட்டாம் வகுப்பு வரையான மாணவர்களுக்கு, 'ப்ரெயில்' பாடப் புத்தகமும், பார்வை குறைபாடு உள்ள மாணவர்களுக்கு, உருப் பெருக்கப்பட்ட அச்சு பாடப் புத்தகங்களும் வழங்கப்படும்

* கோவை, மதுரையில் ஆசிரியர்கள் தங்கிச் செல்ல, ஆறு கோடி ரூபாய் செலவில், ஆசிரியர் இல்லங்கள் அமைக்கப்படும்

* தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில், 2003 மார்ச் 31ம் தேதிக்கு முன், பணி நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்களின், பி.எப்., கணக்குகள், மாநில கணக்காயர் பராமரிப்புக்கு மாற்றப்படும்; இதன்மூலம், 1.19 லட்சம் ஆசிரியர்கள் பலன் பெறுவர்

* தரம் உயர்த்தப்பட்ட, 1,054 நடுநிலை, உயர்நிலைப் பள்ளிகளுக்கு, 1,263 கோடி ரூபாய் செலவில், கூடுதல் பள்ளி கட்டடங்கள் கட்டப்படும்.இவ்வாறு முதல்வர் அறிவித்தார்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement