Ad Code

Responsive Advertisement

குரூப் 1 தேர்வு எழுத 2.22 லட்சம் பேர் விண்ணப்பம்

துணை கலெக்டர், போலீஸ் டி.எஸ்.பி., உட்பட, நான்கு பதவிகளில், 74 பணியிடங்களுக்கான குரூப் 1 தேர்வு எழுத, 2.22 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.தமிழக அரசு துறையில், துணை கலெக்டர் - 19; போலீஸ் டி.எஸ்.பி., - 26; வணிக வரி உதவி கமிஷனர் - 21; மாவட்ட பதிவாளர் - எட்டு என, 74 காலியிடங்களுக்கு, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான - டி.என்.பி.எஸ்.சி., சார்பில், குரூப் 1 தேர்வு, நவம்பர், 8ம் தேதி நடக்கிறது.

இதுகுறித்து, டி.என்.பி.எஸ்.சி., தலைவர் பாலசுப்ரமணியன் கூறியதாவது:குரூப் 1 தேர்வில், 74 காலியிடங்களுக்கு, 2.22 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். விண்ணப்பங்களை பரிசீலிக்கும் பணி விரைவில் துவங்கும். குரூப் 2 பதவிக்கான, 1,136 காலியிடங்களுக்கு, ஜூலை, 15ம் தேதி முதல் ஆகஸ்ட், 8ம் தேதி வரை நேர்காணல் நடந்தது. இதையடுத்து, எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணலுக்கான இணைந்த மதிப்பெண் பட்டியல், டி.என்.பி.எஸ்.சி., இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.இதில் தகுதி பெற்ற, 2,265 பேருக்கு வரும், 24ம் தேதி முதல் செப்டம்பர், 1ம் தேதி வரை கலந்தாய்வு நடக்க உள்ளது. தகுதி பெற்றோருக்கு அழைப்பு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement