Ad Code

Responsive Advertisement

அறிவுத்திறன் குறைபாடுடைய குழந்தைகளுக்கு கொள்ளுப் பொடி சிகிச்சை: சென்னையில் தொடங்கப்படுமா?

அறிவுத்திறன் குறைபாடுடைய குழந்தைகளுக்கான கொள்ளுப் பொடி திமர்தல் சிகிச்சை சென்னை அரசு சித்த மருத்துவமனையில் தொடங்கப்பட வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

அறிவுத்திறன் குறைபாடு: அறிவுத்திறன் குறைபாடு (cerebral palsy)  என்ற நரம்பியல் தொடர்பான பிரச்னைகளால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு மூளை வளர்ச்சி குறைவாக இருக்கும். இதனால், 12 வயதுள்ள குழந்தைகளுக்கு 6 வயது குழந்தைகளின் செயல்பாடுகள்தான் இருக்கும். அத்தகைய குழந்தைகளுக்கு கொள்ளுப் பொடி திமிர்தல் என்ற சிகிச்சை சித்த மருத்துவத்தில் உள்ளது.

பாளையங்கோட்டை: இந்த சிகிச்சையானது பாளையங்கோட்டையில் உள்ள அரசு சித்த மருத்துவக் கல்லூரியில் அளிக்கப்படுகிறது. பிள்ளைப் பிணி மருத்துவத் துறையில் (குழந்தைகள் சிகிச்சை) இந்தச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்தச் சிகிச்சையை சென்னை அரசு சித்த மருத்துவக் கல்லூரியிலும் தொடங்க வேண்டும் என்று மருத்துவர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

6 வயதுக்குள்: அறிவுத்திறன் குறைபாடுடைய குழந்தைகளுக்கு ஆறு வயதுக்கு முன்பே இந்தச் சிகிச்சையை அளிக்கத் தொடங்குவதன் மூலம் அவர்களின் செயல்பாடுகளில் முன்னேற்றம் ஏற்படும். 12 வயது வரையுள்ள அறிவுத்திறன் குறைபாடுடைய குழந்தைகளுக்கு இந்தச் சிகிச்சை நல்ல முன்னேறத்தைக் கொடுக்கும். இதுகுறித்து சென்னை அரும்பாக்கத்தில் உள்ள அரசு சித்த மருத்துவமனை மருத்துவர்கள் கூறியதாவது:

இந்தச் சிகிச்சையின்படி கொள்ளுப் பொடியைக் கொண்டு உடலில் உள்ள 108 வர்ம புள்ளிகளில் மசாஜ் செய்யப்படும். மனிதர்களின் தோல்களில் பல்வேறு நுண்ணிய துளைகள், ரத்த நாளங்கள் உள்ளன. இந்தச் சிகிச்சையின் மூலம் தோல்களில் உள்ள துளைகளின் வழியே ரத்தம் வரை இந்த மருந்தின் தன்மை போய்ச் சேரும். அதனால், ரத்த ஓட்டம் சீராகும். மேலும், இந்தச் சிகிச்சை மூளையின் வளர்ச்சியைத் தூண்டும் திறன் வாய்ந்தது.

சென்னை அரசு சித்த மருத்துவமனையில் இந்தச் சிகிச்சை தொடங்கப்பட்டால் அதன்மூலம் அறிவுத்திறன் குறைபாடுடைய குழந்தைகள் பலர் பயனடைவர். எனவே, பாளையங்கோட்டையைப் போலவே சென்னையிலும் இந்தச் சிகிச்சை தொடங்க வேண்டும் என்று அவர்கள் தெரிவித்தனர்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement