Ad Code

Responsive Advertisement

SSA : 44 வட்டாரங்கள் கல்வியில் பின்தங்கியுள்ளது ஏன்?

தமிழகத்தில் 44 வட்டாரங்கள் கல்வியில் பின்தங்கியிருப்பது ஏன் என, அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டம் சார்பில் ஆய்வு நடத்தப்பட உள்ளது.

தமிழகம் முழுவதும் 385 வட்டாரங்கள் உள்ளன. இதில் பெண் கல்வியில் தேசிய சராசரிக்கும் குறைவாக உள்ள 44 வட்டாரங்கள் கல்வியில் பின்தங்கிய வட்டாரங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.

இதுதொடர்பாக தகவலறிந்த வட்டாரங்கள் கூறியது:

தமிழகத்தில் சேலம் மாவட்டத்தில் மட்டும் 14 வட்டாரங்கள் கல்வியில் பின்தங்கியுள்ளன. இந்த வட்டாரங்கள் பெண் கல்வியில் பின்தங்கியுள்ளதற்கான சமூக, பொருளாதாரக் காரணங்கள் என்ன, குடியிருப்புகளுக்கு அருகில் பள்ளிகள் உள்ளதா, மாணவிகள் படிப்பதற்கான அடிப்படை வசதிகள் உள்ளதா போன்றவை குறித்து ஆய்வு செய்யப்பட உள்ளது.

இதற்காக தேசிய கல்வி திட்டமிடல்- நிர்வாகப் பல்கலைக்கழகம், தேசிய கல்வி ஆராய்ச்சி, பயிற்சி நிறுவனம் ஆகியவற்றுடன் இணைந்து ஆய்வு நடத்தப்படும்.

இந்த ஆய்வின் அடிப்படையில், இந்த வட்டாரங்களை மேம்படுத்துவதற்கான திட்டங்கள் வகுக்கப்படும் என அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement